பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலச் சீர்திருத்தம் 167

கூடைப்பந்து ஆடுகளன் அமைப்பதில்தான் சிரமம் அதிகம்; செலவும் அதிகம். இரண்டு தடித்த இரும்புக் குழாய் களைப் பலமான அடிப்படையுடன் நட்டு கூடைப்பந்து ஆடுவதற்கென்ற இருப்புவளையங்கள், நூல்வலைகளுடன் கூடிய அமைப்புகள் பொருத்தப் பெற்றன. ஆடுகளனுக்கு மணற்பாங்கான செம்மண் கலந்த சரளைகளைப் பரப்பச் செய்து தரை கெட்டிப் படுத்தப் பெற்றது. இந்த ஆடுகளன் மிகச் சிறப்பாக அமைந்தது. இதன் அருகிலேயே வளைப் பந்து (Ring tennis) ஆடுகளன்கள் இரண்டு அமைக்கப் பெற்றன. இதற்கும் கெட்டியான அடிப்படையில் கனம் குறைந்த நான்கு துத்தநாகக் குழாய்கள் பொருத்தப் பெற்று ஆடுகளன்கள் அமைக்கப் பெற்றன. இவற்றிற்கு அதிகச் செலவு இல்லை.

புதிதாக அமைய வேண்டிய கட்டடத்திற்குக் கீழ்புறம் உதைபந்து ஆடுகளன் அமைக்கப்பெற்றது. தற்காலிகமாக. இதைச் சுற்றி ஒட்டப் பந்தயங்கள் நடைபெறுவதற்கு இடங் கள் ஒதுக்கப் பெற்றன. உதைபந்து ஆடுகளனுக்கு மேற்புறம் ஒரமாக வரிசையாகத் தூங்குமூஞ்சி மரங்களை விருத்தி செய்யும் நோக்குடன் நானே என் கையாலேயே பல செடி களை நட்டுப் பராமரித்து வந்தேன். முதல் வேலையாகக் கிணறு வெட்டி உருளை போட்டுவிட்ட படியால் தண்ணீருக் குப் பஞ்சமில்லை. முத்துசாமியும் விளையாட்டுத் துறைக் கென நியமிக்கப் பெற்ற பையனும் செடிகட்குத் தண்ணிர் ஊற்றி நன்கு வளர்த்தனர். -

இடம் வாங்கின மறு ஆண்டே மூன்று வகுப்புகட்கென்று ஒரு நீண்ட ஒட்டுவில்லைக் கட்டடம் எழுப்பப் பெற்றது. மூங்கில் தட்டிகளால் மூன்று அறைகளாகத் தடுக்கப் பெற்று மூன்று வகுப்புகள் நடைபெற்றன. பெரிய கூட்டம் நடை பெறும் போது தட்டிகள் நீக்கப் பெற்றுப் பெரிய சொற்