பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 நினைவுக் குமிழிகள்-2

பல்வேறு பொறுப்புகள் என் தலைமீது இருந்தமையால் இப்பொறுப்பை நான் ஏற்க முடியாத நிலையிலிருந்தேன். திரு. வி.சி. கிருஷ்ணசாமி ரெட்டியார் இந்தப் பளுவை ஏற்க மனமுவந்து முன் வந்தார்; இப்பிரச்சினை ஒருவாறு நீர்ந்தது. துறையூர் பாலக்கரை இச்சிமரத்தடியில் ஒரு வீடு காவியாக இருந்தது. அது சமையல் செய்யவும், 40 மாணாக் கர்கள் வரை தங்கவும் வசதியாக இருந்தது. அதனை வாடகைக்கு உறுதிசெய்யலாம் எனத் தீர்மானிக்கப்பெற்றது,

இனி சமையல்காரன் ஒருவன் வேண்டுமே. அதற்குச் சித்திரைப் பட்டியில் (துறையூருக்கு 2 கல் தொலைவிலுள்ள ஊர் உள்ள ஓர் இளைஞனை (தம்பு’ என்று வழங்கப் பெறுவர்) நியமித்துக் கொள்ளலாம் என உறுதி செய்து கொண்டோம்.

சமையல் பாத்திரங்கள் வாங்க வேண்டுமே. இதில் தல்ல அநுபவம் உள்ளவர் திரு உமாபதி ரெட்டியார். அவரைக் கலந்து யோசித்ததில் ரூ. 1000 தேவைப்படலாம் என்றார். இதற்கு வழி; சுற்றுப்புற ஊர்களில் உள்ள சில செல்வர் களிடம் நன்கொடை வாங்குவதெனத் தீர்மானித்தோம். இதில் திரு உமாபதி ரெட்டியார், திரு. வி. சி. கிருஷ்ணசாமி ரெட்டியார், நான் ஆகிய மூவரும் பலரை அணுகியதில் ரூ. 50, ரூ. 25/-க்கு குறையாமல் வழங்கினர். இங்ங்னம் ரூ. 300;-வசூலாகியது என்பதாக நினைவு.

திரு உமாபதி ரெட்டியாரையே சாமான்கள் வாங்கி வரும்படித் திருச்சிக்கு அனுப்பினேன். திரு. எஸ் சப்தரிஷி ரெட்டியார் என்ற தொடக்கநிலைப் பள்ளி ஆசிரியர் எனக்கும் திரு உமாபதி ரெட்டியாருக்கும் உறவினர். ஏதோ ஒருகாரியமாக அவர் துறையூருக்கு வந்திருந்தார். அவரையும் திரு உமாபதிரெட்டியாருக்குத் துணையாகத் திருச்சிபோய்