பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 நினைவுக் குமிழிகள்-2

வாலும், இளயைத் துடுக்குடன் காணப்படுவதாலும், பெரும் பாலான தமிழாசிரியர்கள் என்னை நன்கு மதிப்பதாலும் என்னைத் தலைவனாக ஏற்படுத்தும் முறையில் ஒர் அமைப்பைக் கருதினார்கள் தமிழாசிரியர்கள்.

இதில் பெருமுயற்சி எடுத்துத் தமிழாசிரியர்களின் கூட்ட மொன்றைக் கூட்டினவர் இலால்குடி திரு. ப. அரங்கசாமி. முதல் கூட்டம் திருச்சி புனித சூசையப்பர் கல்லூரி லாவி மண்டபத்தில் நடைபெற்றது. பலரும் கலந்து உரையாடி "திருச்சி மாவட்டத் தமிழாசிரியர் கழகம்' என்ற ஒர் அமைப்பை ஏற்படுத்தினர். இக்கழகத்திற்கு என்னைத் தலைவனாகத் தேர்ந்தெடுத்தனர். லால்குடி திரு. ப. அரங்க சாமி, பொன்னையா உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியர் (பெயர்நினைவுஇல்லை) ஆகியோரைச் செயலாளர்களாகவும் வேறு திரு, W. C. கிருட்டிணசாமி (எங்கள் பள்ளித் தமிழா சிரியர் உட்பட) எழுவரை ஆட்சிக் குழு உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுத்தனர். மாவட்டத்திலுள்ள எல்லா உயர்நிலைப் பள்ளிகளிலுமுள்ள தமிழாசிரியர்கள் பெயர்கள் முகவரியுடன் தொகுக்கப்பெற்று அவர்கட்கு இம்முடிவு தெரிவிக்கப் பெற்றது. நான் தலைவனாக இருந்தவரை தமிழாசிரியர் கழகம் மிகச் சுறுசுறுப்பாக இயங்கினமைக்கு திரு. ப. அரங்க சாமியும் பொன்னையா உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியரும் முக்கிய காரணமானவர்கள், இக்கழகம் ஆற்றிய பணி பள்ளியிறுதி வகுப்பு மாணவர்கட்கு மதுரைத் தமிழ்ச் சங்கம், சென்னைமாணவர் மன்றம் நடத்திவரும் பொதுத் தேர்வுபோல் ஒன்றை நடத்தி வெற்றிபெற்ற மாணவர் கட்குச் சான்றிதழ்களை வழங்கியதாகும்.

இத்திட்டத்தை எல்லாத் தமிழாசிரியர்களின் முன்னர்

வைத்து அவர்கள் ஒப்புதல் பெறப்பட்டது. இதில் எல்லோரும் ஒத்துழைப்பு நல்கியதால் திட்டம் நான்கு ஐந்து