பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிமாவட்டத் தமிழாசிரியர் கழகம் 173

பெற்றது. 8 மணிக்குச் சிற்றுண்டி காஃபி. பகல் 1-30 மணிக்கு உணவு. இட்டலி, தோசை, இடியாப்பம், பூரிகிழங்கு இவை மாறி மாறி சிற்றுண்டிகளாக அமைந்தன. மதிய உணவு பருப்பு, சாம்பார், ரசம், மோர், ஒரு கறியுடன் தரப்பெற்றது. இரவு 7.30க்கு உணவு. எட்டு மணியிலிருந்து 9-30 மணி வரை படிக்கவேண்டும். படிக்கும் நேரங்களில் அமைதி நிலவவேண்டும். காலையிலும் மாலையிலும் வி.சி. கிருஷ்ணசாமி ரெட்டியார் தவறாது வந்து பார்வை யிடுவார். மேல்வகுப்பு மாணவர் உதவியால் நாள்தோறும் தரப்பெறும் அரிசி, பருப்பு முதலியவற்றிற்குக் கணக்கு வைக்கப்பெற்றது. வாரம் இருமுறை காய்கள் வாங்கப் பெற்றன. இவற்றிற்கெல்லாம் சரியான முறையில் கணக்கு வைத்துக்கொண்டிருந்தார், ஒன்றிரண்டு மேல் வகுப்பு மாணவர்களுக்கும் கணக்கு வைத்துக்கொள்ளும் முறை காட்டப்பெற்றது. மாதச் செலவு ஒவ்வொருவருக்கும் ரூ. 10/- க்கு மேற்படாமல் பார்த்துக் கொள்ளப்பெற்றது. ஏழை மாணவர்களும் தாங்கவேண்டுமல்லவா? நானும் வாரத்திற்கு இருமுறை வாய்ப்பு கிடைக்கும்போது வந்து பார்வையிடுவேன். மாணவர் இல்லம்' உண்மையாகவே * விடுதி” போலில்லாமல் "இல்லம்' போலவே இயங்கி

வருவதைக் கண்டு மிகவும் மகிழ்ந்தேன்.

குமிழி-88 24. திருச்சி மாவட்டத் தமிழாசிரியர் கழகம்

1945 என நினைக்கின்றேன். திருச்சி மாவட்டத் தமிழாசிரியர்கள் ஒன்று கூடும் அமைப்பு ஒன்றைத் தோற்று விக்கவேண்டும் என்ற எண்ணம் தமிழாசிரியர்களிடம் பரவ லாக இருந்து வந்தது. நான் திருச்சி மாவட்டத்தில் வித்துவான் பட்டம்பெற்ற முதல் தலைமையாசிரியராத