பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 நினைவுக் குமிழிகள்-2

அடித்துக் கொண்டுதான் கூவும். இது கோழிகளின் தன்மை; இயல்பு. இந்த இயல்பான நிகழ்ச்சியைக் கவிஞர் தம் குறிப்பை ஏற்றிக் கூறுகின்றார். துக்கம் வருங்கால் துக்கப் படும் பெண்கள் கைகளால் மார்பிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு புலம்புவதைக் கண்டிருச்கின்றோம். இரவு முழுவதும் சக்கரவர்த்தி ஒரு பெண்ணால் மதி திகைத்துப் புலம்பியவற்றையெல்லாம் கண்ணாரக் கண்ட கோழிகள் அத்துயரத்தை ஆற்றமாட்டாமல் தமது இறகுகளாகிய கை களால் வயிற்றில் அறைந்துகொண்டு அழுவனவற்றை யொத்தன என்கின்றார். இக்காட்சியைத் தமக்கே உரிய 'கணிர்' என்று ஒலிக்கும் குரலில் கேட்போர் மனத்தில் நன்கு பதியும் வண்ணம் வருணித்தார் உலக ஊழியர். கம்பன் கவிதையில் பொதிந்த காட்சியை ஊழியர் திரும்பப் படைக்கின்றார். தம் முன்னின்று கேட்போரை தசரதன் காலத்திற்குக் கற்பனையில் போகச் செய்கின்றார்; கைகேயிக் கும் தசரதனுக்கும் இடையே நேரிட்ட வாக்குவாதங்களை யெல்லாம் கேட்போரைக் காணச் செய்து கோழி கூவுதலுக்கு வருகின்றார்.

பாடலை இசையுடன் பாடுகின்றார்: சந்திபிரித்துப் பாடுகின்றார் சென்றயாமம் இயம்புகின்றன கோழிகள்’ என்ற தொடருக்கு அழுத்தம் கொடுத்து இரக்கத்தொனி புலப்படுமாறு பாடுகின்றார், “வண்டு தங்கிய தொங்கல் மார்பன் மயங்கி விம்மியவாரெலாம் என்ற தொடருக்கு அழுத்தம் கொடுத்துப் பாடும்போது கைகேயியின் அந்தப் புரத்துக் காட்சியைத் திரும்பப் படைத்துக் காட்டுகின்றார். கேட்போர் யாவரையும் கண்கலங்க வைத்துவிடுகின்றார். 'கண்டு நெஞ்சு கலங்கி அஞ்சிறை யான காமர் துணைக்கரம்’ என்ற தொடருக்கு அழுத்தம் தந்து பாடும்போது விடியற் காலத்துக் கோழிகளைக் காட்டிவிடுகின்றார். காமர் துணைக் கரம் கொண்டு தம் வயிறு எற்றி எற்றி விளிப்ப போன்றன’