பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20t) நினைவுக் குமிழிகள்-2

பன்மொழிப் புலவர் காட்டிய இன்னொரு பாடல் :

கொற்றவர்க் காண்டு காட்டிக்

கொடுத்தலோ தடுத்த தன்மை பெற்றியின் உணர்தற் பாற்றோ

உயிர்நிலை பிறிதும் உண்டோ? இன்றைநாள் அளவும் அன்னாய் அன்று நீ இழிந்து நீத்த மற்றைநல் அணிகள் காண்உன் மங்கலம் காத்த மன்னோ' (கொற்றவன் - இராமன் அடுத்த தன்மை - ஏற்பட்ட நிலை; பெற்றி - வகை; உயிர் நிலை உயிர் உடலில் இருத்தல்; இழித்து - கழற்றி நீத்த - எறிந்த : மங்கலம் - மங்கலநாண்; காத்த - காப்பாற்றின.) அநுமன் சீதையிடம் தான் வந்த வரலாற்றைக் கூறியதாக அமைந்தது. மங்கல நாண் உள்ளபோதுதான் மகளிர் மற்றைய அணிகளை அணியும் உரிமை பெறுவர். மங்கல நாண் தான் மற்றைய அணிகளைக் காத்தற்குரியது. ஆனால், மங்கள நாணை மற்றைய அணிகள் காத்தன. இவை இல்லாவிடில் இராமபிரான் இறந்துபட்டிருப்பன் என்பதை வாயினால் சொல்லக் கூசி 'உன் மங்கலம் காத்த’ என்று வேறு வகையிற் கூறினான் கம்பநாடன். இது ஒரு புதுமை. இப்படிப் பல எடுத்துக் காட்டுகள் காட்டி அற்புத மாகப் பேசினார் பன்மொழிப் புலவர். ஆனால் இந்த ஆராய்ச்சிப் பேச்சு கூட்டத்தில் எடுபடவில்லை.

அப்போது செங்குட்டுவன் பற்றிய நாடகம் (எங்கள் தமிழாசிரியர் வீ.சி. கிருஷ்ணசாமி எழுதியது - பாட்டுகள் உட்பட) நடைபெற்றது. அப்போது செங்குட்டுவனாக நடித்த T.P. இராமசாமி என்ற மாணவன் எல்லோருடைய

5. சுந்தன. உருக்காட்டு.35.