பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 நினைவுக் குமிழிகள்-2

பொறுப்புகளையும் கவனித்துக் கொண்டு வித்துவான், எம்.ஏ. தேர்வுகளையும் எழுதி என்னை மேல்நிலைக்குப் போகத் தகுதியாக்கிக் கொண்டேன். இவற்றில் பட்ட தொல்லைகளை ஒரு தனிக் குமிழியில் வெளியிட்டுள்ளேன்’.

துறையூரில் பதவியேற்ற ஐந்து ஆண்டுகட்குப் பிறகு வைரிசெட்டிப் பாளையத்தில் ஒர் உயர்நிலைப் பள்ளியைத் தொடங்க வேண்டும் என்று யோசனை கேட்க திரு. S.P. காகரெட்டியார் என்ற நிலக்கிழார் ஒருவர் வந்தார். துறையூரிலிருந்தபோது சுற்றுப்புற ஊர்களிலுள்ள பெரும் புள்ளிகளிடமும் பெற்றோர்களிடமும் நன்கு பழகி யிருந்தேன். இப்பழக்கத்தை என் பள்ளியின் வளர்ச்சிக்காக நன்கு பயன்படுத்திக் கொண்டேன். அவர்கள் வீட்டுத் திருமணங்கள், இறப்பு நிகழ்ச்சிகள் இவற்றிலெல்லாம் கலந்து கொண்டமையால் பலரிடம் நல்ல நெருக்கம் ஏற்பட்டது. நானும் பள்ளி விழாக்களுக்கு அழைப்பு அனுப்புவேன்; அவர்கள் வந்து சிறப்பிப்பார்கள்.

தான் பழகிய ஐந்து மாவட்டக் கல்வி அதிகாரிகள் திரு. C. இரகுநாதன், திருவனந்தபுரம் அரச குடும்பத்தைச் சேர்த்த ஒரு மேனன் (பெயர் நினைவு இல்லை - காரணம், அவர் அரசராகவே நினைத்துக் கொண்டு யாரிடமும் அதிகம் பழகாதவர்), திரு. முருகேச முதலியார் (சைதாப் பேட்டையைச் சேர்ந்தவர்), திரு. சாம்பசிவம் பிள்ளை (கோவைக்கு நான்காம் படிவம் திறக்கும் ஆணை சம்பந்த மாக சென்றிருந்தபோது இவரிடம் பழக்கம் ஏற்பட்டது). திரு. அப்துல் காதர் (காட்பாடி - வேலூரைச் சேர்ந்தவர்) என்பவர்கள்: இவர்களைத் தவிர முசிறிவட்டம் பள்ளித் துணை ஆய்வாளராகப் பணி புரிந்த திரு. சி. சிங்காரவேலு

2. குமிழி - 72. (இந்நூல் பக். 52) காண்க.