பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

235 நினைவுக் குமிழிகள்.2

முல்லைச் சிசிப்ப )ே . எனது

மூ சந் தவிர்த்திடுவாய்."

பாரதியார் கண்ணன் பாட்டு, குறிப்பாகக் 'கண்ணம்மா - என் குழந்தை' என்ற பாட்டு என்னை அடிக்கடி உருக்கும். இதை இப்போது தினைக்கும்போது குழந்தை இல்லாக் குறையின் ஏக்கம் ஒருகால் அடிமனத்தின் நாதமாக இருந்தது தான் இப்பாட்டின்மீது அதிகப் பற்று வைப்பதற்குக் காரணமாக இருக்குமோ! என்று என் மனம் சிந்திக்கின்றது. ஆனால் பள்ளிப் பிள்ளைகள் கிட்டத்தட்ட ஏழுநூறுக்கு மேற்பட்டோரையும் என் பிள்ளைகளாகக் கொண்டிருந்ததால் இந்த ஏக்கம் எழவில்லையோ! ஆனால் வயது ஆன என் அன்னைக்குத் தன் கணவனைப் பேரனாகப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்குமல்லவா? என் மனைவிக்குக் கணவன் மீதுள்ள காதல் குழந்தையின் அன்பாகக் காண வேண்டும் என்ற அவா இருக்குமல்லவா? இந்த எண்ணங்கள் அப்போது என் மனத்தில் உறங்கிய நிலையில் இருந்திருக்கக் கூடும்.

ஆனால் என் :ைத்துனரின் முதல் மனைவியின் குழந்தை - 1938இல் பிறந்தவன் - இப்போது -ெ8 வயதுச் சிறுவனாக எருமைப்பட்டியில் - தன் பாட்டி வீட்டில் தன் தாயாருடன் . இருந்து வருவதை நினைக்கின்றேன். நான் பள்ளி வேலையில் அனைத்தையும் மறந்தாலும் என் மனைவி யிடம் இவை அடிக்கடித் தோன்று மல்லவா? இதைச் சிந்தித்துப் பார்த்தேன். கல்வி வசதி அதிகமிராத எருமைப் பட்டியிலிருந்து அச்சிறுவனைத் துறையூருக்குக் கொணர்ந்து உயர் கல்வி பெற வாய்ப்பும், நேர்க் கவனமும் தந்தால் எதிர் காலத்தில் சிறந்தவனாகத் திகழ்க் கூடுமே என்று கருதியது என் மனம். என் மனைவியிடம் இதைச் சொல்ல, அவளும்

1. பா.க. கண்ணன் பாட்டு . கண்ணம்மா - என்

குழந்தை 2,3,8