பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளர்ப்புப் பிள்ளையின் சோகக் கதை

37

2

இதற்கு ஒப்புக் கொண்டாள். மே மாதத்திலேயே இதை எருமைப் பட்டிக்கும் தெரிவித்து அவர்கள் ஒப்புதலுடன் பையனைத் துறையூருக்கு இட்டுவந்தேன். அச்சிறுவனை, என் வீட்டிலிருந்து சுமார் 4 ஃபர்லாங் தொலைவிலுள்ள ஜமீந்தார் உயர்நிலைத் தொடக்கப் பள்ளியில் மூன்றாவது வகுப்பில் சேர்த்தேன். மதியம் உணவுக்கு வீட்டிற்கு நடத்து வருவது சிரமமாக இருக்கும் என்று நான் சிறுவயதில் உணவு கொண்ட நல்லிப்பாளையம் ரெட்டியார் உணவு விடுதியில் உணவு கொள்ளவும் ஏற்பாடு செய்தேன்.

சுட்டிப் பயல். மிகக் கூரிய அறிவுடையவன். ‘துருதுரு” வென்றிருப்பான். எதையும் கூர்மையாகக் கவனிப்பான். மிக்க யுக்தியுடன் செயற்படுவான். எங்கள் பள்ளியாசிரியர் களில் இருவர் அந்த உணவு விடுதியில் உணவு கொண்டனர். இதனால் அவர்கள் நண்பகலில் அவனைச் சில நிமிடங்கள் கவனித்துக் கொள்ளவும் வாய்ப்பு இருந்தது. இவர்கள் அச்சிறுவனது நற்பழக்க வழக்கங்களைப் பாராட்டிப் பேசுவர்; அவனுடைய திறமைகளை மெச்சுவர். ஒருவர் அவன் உண்னும் முறையே தனிச் சிறப்பு வாய்ந்தது என்பார். சாம்பார் அல்லது தயிர் சாதம் உண்ணும்போது ஒரு கவளம் உண்டவுடன், இலையில் கலைந்திருக்கும் சோற்றை மீண்டும் இலையின் நடுவில் குவியலாகத் தள்ளி மற்றொரு கவளம் எடுத்து வாயிலிட்டுக் கொள்வான். ஒவ்வொரு கவளத்தை எடுக்கும்போதும் இலையில் குவியலாக நடுவில் தள்ளிய பிறகே அடுத்த கவளத்தை எடுப்பான். உண்ட பிறகு இலை சுத்தமாக இருக்கும். அவன் சாப்பிடுவதையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றும்' என்று தம்மை மறந்து பேசுவார். அடிக்கடி இப்பழக்கத்தை வியந்து போற்றுவார்.