பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 நினைவுக் குமிழிகள்-2

விஷயத்தில் உதவும் பொருட்டுத் தம்பு என்னைத் தம் செலவில் சென்னைக்கு இட்டுச் சென்று ஒரு வாரம் வைத்திருந்தபோது இந்த வரலாற்றையெல்லாம் அவர் வாயாலேயே சொல்லக்கேட்டேன். சிலசமயம் அருணாசலத் துடனும், தம்புவுடனும் திருவல்லிக்கேணி கடற்கரையில் மணலில் அமர்ந்துகொண்டு உரையாடுவதுமுண்டு.

தம்பு நளினமானப் பழகுவர். நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர். அருணாசலத்தைப் பார்க்கும்போதெல்லாம் பண்பு தவறாமல் உரையாடுவார்; இடை இடையே தம் கோரிக்கையையும் விடுவார். நேஷனல் மோட்டார் சர்வீஸ் அன்பரும் அடிக்கடி அருணாசலத்தைச் சந்தித்து இவ்வாறு உரையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால் தம்புக்கு இருக்கும் அளவுக்கு உலகியலறிவு, உரையாடும் நளினம், பொறுமை முதலியவை அவருக்கு இல்லை. சில சமயம் இருவருமே ஒரே சமயத்தில் அருணாசலத்தைச் சந்தித்து உரையாடி அவருக்குத் தருமசங்கடத்தை விளை விப்பதுமுண்டு.

அருணாசலம் காலக்கெடுவின்றித் தம்மை இழுக்கடிப்

பதைக்கண்டு நேஷனல் மோட்டார் சர்வீஸ் அன்பர் மிக்க சினம் கொண்டார். அருணாசலத்தை அவரது இளமைக்கால நிகழ்ச்சிகளை எடுத்துக்கூடி அவரை வாய்க்குவந்தபடி ஏசிப் பேசித் திரும்பினார். இதனால் இருவரிடையேயும் நொது மலாக இருந்த அருணாசலத்தின் அன்பு ஒருவரிடையே வெறுப்பாக மாறிவிட்டது. இதன் முடிவு எப்படிப்போகும் என்பதை நாம் அறிந்ததே. இத்தகையவருக்கு எப்படி உதவி கிடைக்கும்? இவ்விடத்தில் சினத்தின் கேட்டைப்பற்றி,

சினம்கொல்வர் தம்மைத்தாமே தீயாற்சுட்டு

செத்திடுவார் ஒப்பாவார்; சினங்கொள்வார் தாம்

மனங்கொண்டு தம்கழுத்தைத் தாமே வெய்ய