பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. R. கிருட்டினசாமி ரெட்டியார் 265

வாள்கொண்டு கிழித்திடுவார் மானு வாராம்

தினங்கோடி முறைமனிதர் சினத்தில் வீழ்வார் சினம்.பிறர்மேல் தாம்கொண்டு கவலை யாகச் செய்ததெனித் துயர்க்கடலை வீழ்ந்து சாவார்

என்று பாரதியார் கூறும் கருத்தும் இக்குமிழியில் எழு கின்றது. தம் தலையில் தாமே மண்ணைவாரி போட்டுக் கொண்டதுபோன்ற நிலையினை அடைந்தார் நேஷனல் மோட்டார் சர்வீஸ் அன்பர்.

நாளடைவில் அருணாசலத்தின் அன்பு தம்புமீது சாய்ந்தது. மிக விரைந்து செயற்பட்டார். காமராசரைச் கலந்தார்; இருவரது கூட்டால் தம்புக்கு "சிதம்பர விலாஸ்’ மோட்டார் கம்பெனிபோட்ட விண்ணப்பத்தின்மீது பதின் மூன்று பேருந்துகட்கு இணக்கச்சீட்டு (Permit) கிடைத்தது. வண்டிகள் ஓடத் தொடங்கின. வசூல் காவிரிவெள்ளம் போல் பெருகத் தொடங்கியது. தம்புக்கு நன்கு பழக்கப் பட்ட தொழிலாதலால் அது நாடோறும் புதுமெருகேறி பொதுமக்கள் புகழும் கம்பெனியாயிற்று. கண்ணன் காண்டியனுக்கு உரைத்த சுதர்மத்தின் பலனைத் தம்புவின் வாழ்வில் காணலாம்.

Χ X X

T. V. S. கம்பெனி மாதிரி பேருந்துகளைத் தூய்மையாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தினார். ஒட்டுநரும் நடத்துநரும் பயணிகளிடம் இங்கிதமாகவும் மரியாதை யாகவும் நடந்து கொள்ளுமாறு அறிவுரைகள் தந்தார். பேருந்துகள் புறப்படும் நேரம், அவை சேர வேண்டிய இடங்களை அடையும் நேரம் இவை பயணிகள் செளகரியத் துக்ரு ஏற்றவாறு காலங்களை மாற்றி அரசிடம் இசைவு பெற்றார். இதனால் கம்பெனி காமதேனு பால் சுரப்பதைப்