பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 நினைவுக் குமிழிகள்-2

பெற்றார். இதனால் கம்பெனி காமதேனு பால் சுரப் பதைப் போல் அதிக வருமானத்தைத் தந்தது. தாம் கம்பெனியை மேற்பார்த்து நடத்துவதற்காக ரூபாயில் நான்கனா பங்கு உரிமையாக ஆறணாபங்கு: நிதி உதவி செய்தவருக்கு ஆறணா பங்கு என்றுபங்குகளை வரையறைப் படுத்திக் கொண்டிருந்தார். கம்பெனி செழித்தவுடன் தம்புவின் வாழ்வும் செழித்தது. நடையுடை பாவனைகளில் சிறிது மாற்றம் காணப்பட்டது. எளிமையாக இருப்பவர் தான். படாடோபமாக வாழ விரும்பாதவர். இக்காலத்தில் தான் துறையூர் அஞ்சல் நிலைய வீதியில் அஞ்சல் நிலையத் திற்கருகில் ஒரு பழைய வீட்டை வாங்கி நல்ல முறையில் புதுப்பித்து பெரிய திருமாளிகையாக்கினார். நவின வசதிகள் அனைத்தையும் செய்து கொண்டார். கிருட்டிணசாமி என்ற கம் பெயருக்கேற்ப திருமாளிகைக்குத் துவரரகை' என்று திருநாமம் இட்டார். துறையூர்-திருச்சி சாலையில் ஒரு பெரிய இடம் வாங்கி அதில் பேருந்துகள் இரவில் நிற்பதற்காகவும், கம்பெனி அலுவலகத்திற்காகவும் ஏற்ற வசதிகளைச் செய்து கொண்டார். மகனை நல்ல முறையில் கல்வி கற்க ஏற்பாடுகள் செய்தார், மகளுக்கு இசைப் பயிற்சி அளிக்க வாய்ப்புகளை உண்டாக்கினார்.

இவர் நிலையைக் கண்ட இனத்தார்களில் சிலர் பொறாமைப்பட்டனர். மிட்டாதார், ஜமீந்தார்போல் வாழும் தம் வாழ்க்கை வசதிகளை விட அதிகமாக்கிக் கொண்டாரே என்றகடுப்புதான் இதற்குக் காரணம். சிலர் தமக்குக் கம்பெனியில் பங்கு கிடைக்கும், எப்படியாகிலும் ஒரனா, இரண்டனா பங்கு வாங்கிக் கொள்ளலாம் என்று கருதியே பெருந்தொகைகளை வவியவந்து தந்தனர். தம்பு அவற்றை மறுக்கவில்லை; வாங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொண்டார். அதிகம் போனால் வட்டி தானே தர வேண்டும், அதனை ஒன்றுக்கு ஒன்றரை வீதம் தந்தால்