பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. R. கிருட்டிணசாமி ரெட்டியார் 267

போச்சு என்று கருதியே பணத்தை வாங்கிக் கொண்டார். இதற்கிடையில் பணம் தந்த துணிக்கடை முதலாளியும் இவர்மீது பொறாமைப்பட்டிருக்க வேண்டும் என்பது என் கணிப்பு. பழைய முதலாளி - செவிட்டுத் தம்பு கூட இவருடைய வேகமான முன்னேற்றத்தைக் கண்டு பொறாமைப்பட்டிருக்க வேண்டும். "ஏழ்மை நிலையி விருந்தவர் சிரும் சிறப்புமாக வாழ்கின்றாரே என்று சிலரது கண்னெச்சில் கூட பட்டிருக்க வேண்டும்.

இப்படி ஒன்றிரண்டு ஆண்டுகள் உருண்டோடின. இக் காலத்தில்தான் முன்னேற்றத்தை முன்பே கணித்துக் கூறிய சோதிடருக்குப் பாராட்டுகளும்வெகுமதிகளும் பொற்கிழியும் வழங்கியதாகக் கேள்வி! திருச்சி மாவட்டத்தில் பெரும்புள்ளி களும் ஒருவராகத் திகழலானார் தம்பு. ஏழை எளியவர்கட்கு இயன்ற வரை உதவிகள் செய்தார். தம்மிடம் பணியாற்றும் அனைவருக்கும் நல்ல ஊதியம் போனஸ், தீபாவளி பொங்கல் பண்டிகைகட்கு வெகுமதிகள், அன்பளிப்புகள் தாராளமாக வழங்கினார். இதனாலும் நாலும் தெரிந்த நல்லவர் வல்லவராக இருந்தமையாலும் தம்பு புகழேணியில் நின்றார். காங்கிரஸ் கட்சியும் இவர்மீது கவனத்தை வைத்தது. தமக்கு ஒல்லும் வகையெல்லாம் உதவிய T. S. அருணாசலம் குடும்பத்திற்குக் கணிசமான நிதி உதவி அதைச் செழிப்பாக்க வேண்டும் என்று அடிக்கடி என்னிடம் சொல்லிக் கொண்டிருப்பார். அப்படி ஏதாவது செய்திருந் தாலும் பிறர் அறியாமல்தான் செய்வார். இவர் செய்யும் உதவிகளில் விளம்பரத் தொனி இராது; படாடோபம் இராது. வலக்கை செய்வது இடக்கைக்குக் கூடத் தெரியாத வண்ணம் பிறருக்கு உதவுவார்.

X X X

இந்த நிலையில் நான் துறையூர்ப் பணியைத் துறந்து

காரைக்குடியில் அழகப்பர் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில்