பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 நினைவுக் குமிழிகள்-2

பேராசிரியர் பணியை ஒப்புக் கொண்டு விட்டேன். எந்தப் பணியானாலும் அதில்என்னையே மறந்து ஆழ்ந்துவிடுதல்என் இயலிப்பு, பணியே பரமன து வழிபாடு (Work is worship) என்ற வாசகமே எனக்குச் சிறந்த ஒளிவிளக்காகப் புலப் பட்டது. "என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற அப்பர் பெருமானின் அருள் வாக்கின் கருத்தையும் ஒரளவு என் பணி வாழ்க்கையில் கடைப் பிடித்தேன். பல காரணங் களால், பல இடர்ப்பாடுகளால் தள்ளிப் போடப்பட்ட எம். ஏ. தேர்வுக்குப் படித்தல், கல்லூரி நூலகப் பணி, இவற்றில் மறந்த நிலை. கற்பிக்கும் முறை பற்றியும் கல்வி உளவியல் பற்றியும் அதிகமான நூல்களைப் படித்துக் குறிப்புகள் எடுக்க வேண்டியிருந்தது. இதனால் துறையூர் செய்திகளில் கவனமே இருப்பதில்லை.

X X Χ

தான்கு பேர் சேர்ந்து கூட்டு வாணிகம் செய்வதில் யாரோ ஒருவர்தான் வாணிகத்தில் செயற்படும் நிலையில் இருக்கமுடியும். சம்பள ஆட்களைக் கொண்டு தான் செயல் களைச் செ ய் வி. க் க வேண்டியிருக்கும். எல்லோரும் வாணிகத்தில் கங்காணித்தனம் பண்ணத் தொடங்கினால் வாணிகம் உருப்படாது. திறமையும் அநுபவமும் இருந்தால் யோசனை கூறலாமேயன்றி அடிக்கடி தலையீடு கூடாது. செயல்படுபவர் விருப்பம் போல் செய்கின்றார் என்ற ஐயமும் கூடாது. வாணிகத்தின் முன்னேற்றம் கருதி விட்டுக் கொடுக்கும் மனநிலை வேண்டும். -

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்

தீரா இடும்பை தரும் (குறள் 510) என்பது ளள்ளுவர் வாக்கு. இப்படி ஒரு சூழ்நிலை ஏற்படத் தொடங்கினால் மாற்று முறை ஒன்றைக் கண்டுபிடித்தேயாக வேண்டும். இப்படி ஒரு சூழ்நிலை தம்பு கம்பெனியில்