பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. R. கிருட்டினசாமி ரெட்டியார் 269

ஏற்பட்டதோ என்ற ஐயம் என்பால் உண்டு, நேர்மையும் , நாணயமும் உள்ள ஒருவரை ஐயுறுதல்தொழில் முன்னேற்றத் திற்குக் குந்தகத்தைத்தான் விளைவிக்கும். கூர்த்த மதியை உடையவராதலால் தம்பு எந்தவிதச் சூழ்நிலையையும் நாகுக்காகச் சமாளிக்கும்திறமை அவருக்குக் கை வந்த கலை. கீதையில் கண்ணன் குறிப்பிடும் சுதர்ம உணர்வுதான் உந்து விசை தந்து அவரைச் செயற்படத் தூண்டியிருக்க வேண்டும்.

என்றோ ஒரு நாள் தொழிலுக்கு முதலீடு செய்த துணிக்கடை முதலாளியை வரவழைத்து அவரிடம் விவர மாகப் பேசி அவர் முதலீடாகப் போட்ட தொகைக்குக் கணிசமான அளவுக்கு மேலாகவே வட்டி போட்டுச் கணக்கைத் தீர்த்துவிட்டார். பல தடவைகளில் பலர் ஈரொட்டாகத் தந்த தொகைகட்கு நல்ல வட்டி போட்டுக் அவர்கள் கணக்குகளையும் தீர்த்து விட்டார். இப்பொழுது பேருந்து கம்பெனிக்கு முழு உரிமையாளராகி விட்டார். இனி தம் விருப்பப்படி கம்பெனியை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லுதலாம். இவற்றிலிருந்து பல கிளை நிறுவனங்களையும் தொடங்கி விருத்தி செய்யலாம். இறையருளால் அந்த நிலைகள் உருவாகத் தொடங்கின. இதற்கு முன்னரே உறையூர் சாலையில் ஒரு திருமாளிகையை அமைத்துக் கொண்டு திருச்சி வாசியாகி விட்டார்.

சில ஆண்டுகளில் "துவாரகை மாளிகையை விற்றுவிட்டுத் திருச்சிக்குக் குடியேறினார். உறையூர் சாலை ரோடில் ஒரு பெரிய மாளிகை அமைத்துக் கொண்டு அதில் வாழ்ந்து வந்தார். இக்காலத்தில் காமராசர் முதலமைச்சராக இருந்த காலம். இந்த நேர்மையான முதலமைச்சரின் நட்பு 'நல்லவர் என்று பேரெடுத்த தம்புவிற்குக் கிடைத்தது இ ைற வ ணி ன் திருஉளக் குறிப்பாகும். இக்காலத்தில் பேருந்துத் தொழிலையும், பெட்ரோல், மண்ணெண்ணெய்