பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 நினைவுச் குமிழிகள்-2

மகனை உங்களிடம்ஒப்படைத்தேன். இவனை, ஆளாக்குவது உங்கள் பொறுப்பு' என்று சொல்லி ஒப்படைத்தார். ஒன்றிரண்டு ஆண்டுகளில் அவர் விண்ணாடு புக்கார். நல்லொழுக்க முள்ள பையன் முத்து படிப்பில் சராசரி மாணவனுக்கு மேல் தரத்தில் உயர்ந்தவன். பள்ளியிறுதி வகுப்புவரை படிப்பை முடித்துக் கொண்டு திருச்சியில் ஒரு கல்லூரியில் சேர்ந்து இடைநிலை வகுப்புக் (Intermediate) கல்வியையும் முடித்துக் கொண்டு B, A (Hons) படிக்க முயன்றான்; திருச்சியில் இடம் கிடைக்கவில்லை. அவனுடைய அன்னையார் பையனை இட்டுக் கொண்டு என்னிடம் வந்தார். பையனை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு இட்டுச் சென்றேன். தமிழறிந்த (வித்துவான்) தலைமையாசிரியனாக இருந்தமையால் தமிழுலகில்-ஏன்? வெளியுலகிலும் -நல்ல மதிப்பு இருந்தது. பிராமணரல்லாத தலைமையாசிரியர்கள் என்னுடைய படிப்புக்கும் படாடோப மற்ற அமைதியான போக்கிற்கும் பள்ளிக்காக நான்உழைத்த உழைப்பிற்கும் நல்ல மதிப்பையும் பாராட்டலையும் வழங்கினர். அழுக்காறு தலை காட்டாதிருந்தது வியப்பினும் வியப்பு.

நான் அண்ணாமலை நகர் சென்றபோது பி.ஏ. (೩ಣಗೆ) சேரும் காலம் கடந்தது. விண்ணப்ப பாரம் கூட தர மறுத்தனர். ஆனால் துறைத் தலைவர்களின் கோரிக்கையின் பேரில் தருவதாகக் கூறினர். அக்காலத்தில் சீரும் சிறப்பு மாகவும் பிறருக்கு உவந்து உதவுவதிலும் சிறந்து திகழ்ந்தவர் டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார் (ஏ. சி. செட்டியர் என்பதே எல்லோரும் அறிந்த பெயர்). என்னுடைய தமிழறிவை "மூலதனமாகக் கொண்டு டாக்டர் செட்டியாரைச் சந்தித்து நிலையை விளக்கினேன். "பையன் வரலாறு படிக்க விரும்புகின்றான்: தமிழில் நாட்டம்