பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 - நினைவுக் குமிழிகள்-2

புராணத்தில் காணப்பெறுகின்றது. இது மரபு முை றயில் (கற்பு முறையில்) கந்தன் தெய்வ யானையை மணந்த வரலாறு. கந்தன் வள்ளியைக் களவு முறையில் மணந்த இடமும் நினைவிற்கு வருகின்றது. என் அருமை நண்பர், சீர்திருத்தச் செம்மல் சொ, முருகப்பா அவர்கள் (நகரத்தார்) மரகதவல்லி அம்மையாரை (விசுவகர்மகுலக் கைம்பெண்) தந்தை பெரியார் தலைமையில் மணந்த இடமும் திருப்பரங் குன்றமே. பட்டுக் கோட்டையில் ஒரு சுயமரியாதைக் கூட்டத்தில் சென். முருகப்பா அவர்கள் பேசியபோது மரகத வல்லி அம்மையார் எழுப்பிய சவாலுக்கு விடைகண்ட இடம் திருப்பரங்குன்றம், இருப்பிடம் திரும்பி மதிய உணவை முடித்துக்கொண்டுச் சற்று ஓய்வுகொண்டு பிற்பகல் திருமலை நாயகர் மகால், வண்டியூர் தெப்பகுளம், கூடல் அழகர் கோயில் முதலான இடங்கட்குச் சென்று வந்தோம்.

அழகர் கோயில் மறுநாள் காலையில் பழமுதிர் சோலை’ என்று திருமுருகாற்றுப் படையில் வருணிக்கப் பெறுவதும், ஆழ்வார் பாசுரங்களால் 'திருமாலிருஞ்சோலை மலை என்று மங்களாசாசனம் பெற்றதுமான அழகர் கோயில் சென்றுவரும் திட்டத்தை எங்கள் குழுவிடம் சொன்னேன். கோடைக்காலமாதலால் எல்லோரும் சோர்வுற்ற நிலையி விருந்தோம். பெரும்பாலோர் அழகர் கோயில் சென்றுவர விரும்பவில்லை. என் மனைவி, என் அன்னை கூட வர மறுத்தனர். இவர்களை மீனாட்சி கோயில் -புதுமண்டபக் கடைகளைச் சுற்றும்படி விட்டுவிட்டு நான், என் மைத்துனர் முதல் மனைவி, அரங்கசாமி செட்டியார் கொழுந்தி, சட மங்கலம்’ என்ற அம்மையார் மட்டிலும் போ:வர ஒரு வதிரை வண்டியை அமர்த்திக் கொண்டு அழகர் கோயில் சென்றோம். ரூ.12. வாடகை தந்ததாக நினைவு. அக் காலத்தில் (1948) இது பெரிய தொகை வண்டிக்காரனுக்கு.