பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 நினைவுக் குமிழிகள்-2

சொற்கள் இல்லையாயினும் மதுரையில் வளர்ந்து வந்த நச்சினார்க்கினியர் திருப்பரங்குன்றத்தையே குறித்திருப்பது கவனிக்கத்தக்கது.

மதுரைக்கு அண்மையிலுள்ள அழகர்மலைப் பகுதியில் மெய்யாகவே ஒரு முருகன் திருக்கோயில் இருந்திருக்க வேண்டுமாயின் அவர் அதனைக் குறித்திருத்தல் கூடுமே யன்றோ? பரிபாடலில் முருகனைப் பற்றி (செவ்வேள்பற்றி) எழுவர் பாடிய எட்டுப் பாடல்கள் உள்ளன. அவற்றுள் ஒன்றிலேனும் பழமுதிர்சோலை பற்றியோ அங்குள்ள முருகனைப் பற்றியோ ஒரு குறிப்பும் காணப் பெறவில்லை என்பது ஈண்டுச் சிந்திக்கத் தக்கது. திருமுருகாற்றுப் படையின் ஈற்றடியாகிய பழமுதிர்சோலைமலை கிழவோன்’ என்பது எழுவாயாக அமைந்துள்ளது. மலை கிழவோன்’ என்பதற்கு மலைக்கு உரியவன், உரிமை பூண்டவன்’ என்பது பொருள், ஒருமலைமீது சிவன் கோயில் அல்லது திருமால் கோயில் இருப்பினும் அம்மலைக்கு உரியவன் முருகன் என்பது "சேயோன்மேய மை வரை உலகம்’ என்ற தொல்காப்பிய நூற்பாத் தொடரால் (பொருள்-அகத் திணையியல் நூற்.15) உறுதிப்படும். அதாவது திருமாலிருஞ் சோலை மலைக்கு முருகன் சுேத்திர பாலனாய் இருக் கின்றான்' என்று கொள்வதே பொருத்தமாகும்."

அழகர்மலைக்கு வந்தவுடனே நம்மாழ்வார் பாசுர மொன்று நம் மனத்தில் குமிழியிடத் தொடங்குகின்றது.

மலையில் முருகன் rேத்திரபாலனாய் இருக் கின்றான் என்று திருவேங்கட புராணமும் திருவேங்கடத் தந்தாதியும் தெளிவாகக் குறிப் பிட்டிருப்பது ஈண்டு கருதத்தக்கது.