பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318 - - நினைவுக் குமிழிகள்-2

தாளும் சிலம்பும் சதங்கையும்

தண்டையும் சண்முகமும்

தோளும் கடம்பும் எனக்குமுன்

னேவந்து தோன்றி.டினே (38)

விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள்; மெய்ம்மைகுன்றா மொழிக்குத் துணைமுரு காவெனும்

நாமங்கள்; முன்புசெய்த பழிக்குத் துணை அவன் பன்னிரு

தோளும், பயந்ததனி வழிக்குத் துணைவடி வேலும்செங்

கோடன் மயூரமுமே (70

மாலோன் மருகனை மன்றாடி

மைந்தனை வானவர்க்கு மேலான தேவனை மெய்ஞ்ஞான

தெய்வத்தை மேதினியிற் சேலார் வயற்பொழில் செங்கோ

டனைச்சென்று கண்டுதொழ நாலா யிரங்கண் படைத்தில

னேஅந்த நான்முகனே (90) இவற்றை எழுதும்போது இன்றும் இவற்றில் ஆழங்கால் படுகின்றேன். முருகனை மனமாரச் சேவித்து RFpr ஆடையை மாற்றிக் கொண்டு இருக்கை திரும்பினோம்,

நெல்லையப்பர் கோயில் : சிறிதளவு சிற்றுண்டியும் காஃபியும் உட்கொண்டு நெல்லையப்பர் கோயிலை நோக்கி விரைந்தோம். நகரப் பேருந்தில் ஏறித் திருக்கோயில் அருகில் இறங்கித் திருக்கோயிலினுள் புகுந்தோம், காந்திமதி அம்மன் திருச்சந்நிதி வழியாக. மதுரையிலுள்ள சம்பிரதாயத்தைப்