பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தலப் பயணம்-கன்னியாகுமரி 337

படி விசுவகர்மா இங்குத் தாணுமாலயனுக்கு திருக்கோயிலை நிர்மாணித்தான் என்பது செவிவழிச் செய்தி,

திங்களும் கருணை காட்டும்:

தீக்கண்உன் வெகுளி காட்டும்; கங்கையுன் பெருமை காட்டும்;

கடுவுமுன் ஆண்மை காட்டும்; சிங்கம் நுண் இடையைக் காட்டச்

சிறையனம் நடையைக் காட்டும்; மங்கையோர் பாகா! தாணு

மாலையா! சுசிந்தை வாழ்வே1” என்று தானுமாலயனை வாழ்த்தி விடைபெறுகின்றோம்.

திருவனந்தபுரம் : தானுமாலயனிடம் விடைபெற்றுக் கொண்டு நாகர்கோவில் வந்து திருவனந்தபுரம் புறப்படு கின்றோம் பேருந்து மூலம். பேருந்து திருவனந்தபுரத்தை நோக்கிச் செல்லுங்கால் சாலையின் இருபுறமும் அடர்ந்த தோப்புகள், ஓங்கி உயர்ந்த மலைக்குன்றுகள், பாங்குடன் திகழும் மணல் மேடுகள், பூங்கொத்துகள் குலாவும் குளிர் சோலைகள், குறுக்கும் நெடுக்குமாக வலைப்பின்னல் போன்றுள்ள பாய்ந்து செல்லும் சிற்றாறுகள், கால்வாய்கள் இவற்றைக் கண்டு களிக்கின்றோம். இருமருங்கும் காணப் படும் ஓங்கி உயர்ந்த பலா மரங்களில் குலைகுலையாகத் தொங்கும் பலாக்கனிகள் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின்றன.

ஓங்குமரன் ஓங்கிமலை

ஒங்குமணல் ஓங்கிப் பூங்குலை குலாவுகுளிர்

சோலையுடை விம்மித்

2. தே. வி : மலரும் மாலையும்-சுசிந்தை மால்ை

நி-22