பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

335 நினைவுக் குமிழிகள்-2

செய்தியறிந்த மூவரும் அனசூயையிடம் வந்து தமது கணவர்கள் பழைய வடிவம் அடையத் தவம் கிடக் கின்றனர். அனசூ யை தேவர் மூவரையும் பழைய உருவங் களை அடையுமாறு அருள்கின்றாள். அனசூயையின் வேண்டுகோளின்படி மூவரும் இணைந்து தானுமால் அயனாக (தானு - சிவன், மால் - திருமால்; அயன் - நான் முகன்) ஒரே உருவத்தில் அந்தத் தலத்தில் தங்கிவிடு கின்றனர்.

தானு மாலயன் வரலாற்றை அறிந்த நாம் : சுசீந்திரம்’ என்ற பெயர்க் காரணத்தையும் அறிந்து கொள்ள வேண்டு மல்லவா? அகலிகை - இந்திரன் கதையை நாம் அறிவோம். அகலிகையைக் கல்லாகவும் இந்திரன் உடல் முழுவதும் பெண் குறியாகும் படியும் கெளதமர் சாபம் இடுகின்றார். பின்னர் தேவர்களின் வேண்டுகோளின்படி தேவேந்திரன் உடல் எல்லாம் கண்களாகும்படி சாபத்தை மாற்றுகின்றார் முனிவர். அந்த இந்திரன் இத்தலத்திற்கு வந்துதான் சாப நீக்கம் பெறுகின்றான். அவன் உடலும் தூய்மையாக்கப் பெற்று (சுத்திகரிக்கப் பெற்று)ப் பழைய உருவை அடை கின்றான். இந்திரன் சுசி பெற்றதலம் சுசி இந்திரம்சுசீந்திரம்’ என்ற பெயர் பெறுகின்றது. இங்குள்ள தாணு மாலயனை ஒவ்வோர் இரவும் தேவேந்திரனே பூசை செய் கின்றான் என்பது ஐதிகம். இங்கு அர்த்தசாம பூசை இல்லை. ஆனால் பூசைக்கு வேண்டிய திரவியங்களைச் சேகரித்து வைத்து விட்டு அர்ச்சகர்கள் நின்று கொள்வர், அர்த்த சாம பூசை அமராபதியால் நடைபெறுவதால் மாலை பூசை செய்தவர் காலை கடை திறக்கக் கூடாது என்பது கட்டளை. இது காரணமாக இங்குப் பூசைக்கு இருவர் நியமிக்கப் பெற்றுள்ளனர். காலையில் கடை திறக்கும்போது "அகம் கண்டது புறம் கூறேன்' என்று சூளுரைத்தே வாயில் திறக்கவேண்டும் என்பது கட்டளை. தேவேந்திரன் ஆணைப்