பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தலப் பயணம்-கன்னியாகுமரி 339

(திருவாய் 10,2:4) என்று நம்மாழ்வார் இத்திருப்பதியைச் சிறப்பிக்கின்றார். கிட்டத்தட்ட இதே நிலையினை இன்றும் காணலாம். இந்த அழகிய திருப்பதியை நம்மாழ்வார் மட்டிலுமே மங்களாசாசனம் செய்துள்ளார் (10.2). இந்த மங்களாசாசனப் பாசுரங்களைச் சிந்தித்த வண்ணம் திருக் கோயிலை அடைகின்றோம். திருக்கோயிலுக்குள் நுழை பவர்கள் சட்டை, பனியன் அணியக்கூடாது என்பது நடை முறை. இவற்றைக் கழற்றிக் கோயில் வாயிலில் இதற் கென்றே காத்துக் கிடக்கும் ஒருவரிடம் தந்து செல்கின்றோம். திருச்சுற்றைச் சுற்றிவருவதற்கே அரைமணி நேரத்திற்கு மேலாகும். இறுதியாக கருவறைக்கு வருகின்றோம்.

இந்தத் திவ்வியதேசம் சாதாரணமானதன்று. இஃது 'அயர்வறும் அமரர்களும் வந்து அடிமை செய்யும் இட மாதலின் திருநாட்டைக் காட்டிலும் ஏற்றம் பெற்றதாகும். அமரர்களின் தலைவரான சேனை முதலியார் வந்து வழி படுதலால் அவருடன் நித்திய சூரிகளும் வந்து அந்தரங்கமான பணிவிடை செய்கின்றனர். நித்திய சூரிகளும், நான்முகன் முதலிய தேவர்களும், நம்போலியரும் வழிபடுவதற்கென்றே இந்த எம்பெருமான் மூன்று திருவாயில்களை அமைத்துக் கொண்டு சேவை சாதிக்கின்றான். முத்தர்களும் நித்திய சூரிகளும் திருமுகத்திற்கு நேராகவுள்ள வாயிலின்முன் நின்றும், அரன் அயன் முதலிய தேவர்கள் திருநாபிக்கு நேராக வுள்ள வாயிலின் முன் நின்றும், நம்போவியர் கிடைத்தற் கரிய திருவடிக்கு நேரேயுள்ள வாயிலின்முன் நின்றும் வழி படல் வேண்டும். இன்றும் இத்தகைய அமைப்பினைக் கருவறையில் காணலாம். இதனை ஆசாரிய ஹிருதயமும் முகநாபி பாதங்களை துவாரத்திரயத்திலே காட்டும்' (திரயம் - மூன்று) என்று குறிப்பிடும்.

4. ஆசா. ஹிரு. 183.