பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தலப் பயணம்-பழநி 349

காலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்துக்கொண்டு திருமலைக்குப் பேருந்தில் புறப்படுகின்றோம்.

கண்ணனடி யிணை எமக்குக் காட்டும் வெற்பு;

கடுவினையர் இருவினையும் கடியும் வெற்பு; திண்ணமிது வீடுஎன்னத் திகழும் வெற்பு;

தெளிந்தபெருந் தீர்த்தங்கள் செறிந்த வெற்பு; ‘புண்ணியத்தின் புகல்இது எனப் புகழும் வெற்பு;

பொன்னுலகின் போகமெலாம் புணர்க்கும் வெற்பு: விண்ணவரும் மண்ணவரும் விரும்பும் வெற்பு:

வேங்கடவெற்பு எனவழங்கும் வேத வெற்பே." (கடியும் - ஒழிக்கும்; திண்ணம் : உறுதி: செறிந்த - நிறைந்த; புகல் - இருப்பிடம்: பொன்.உலகு - பரம பதம்; புணர்க்கும் - அடைவிக்கும்.) - என்ற வேதாந்த தேசிகரின் பாசுரத்தை நினைந்தவண்ணம் பேருந்தில் இருக்க, பேருந்து கொண்டை ஊசி வளைவில் நெளிந்து நெளிந்து போய்க் கொண்டிருக்கின்றது. புதிதாக அமைக்கப்பெற்ற சாலை இது ; கல் - மண் சாலைதான்; இன்னும் தார்கூடப் போடப்பெறவில்லை.

மலையை அடைந்ததும் அரங்கசாமி ரெட்டியார் மொட்டையடித்துக் கொள்ளுகின்றார். பழநியாண்ட வனைப் போல் மொட்டையடித்துக் கொள்ளாது வந்தவர் களையெல்லாம் மொட்டையடித்து அனுப்புபவன் ஏழுமலை யான். என்ன கருத்திலோ இப்படிச் செய்கின்றான்? இது ஒருவரும் அறியாத புதிர். எல்லோரும் கோனேறு என்னும் திருக்குளத்தில் நீராடி மாற்று உடை அணிந்து கொள்ளு கின்றோம். கோ ைடக் கால மா த லா ல் ஈரஆடையும் விரைவில் உலர்ந்துவிடுகின்றது. அதனை மடித்துப் பைகளில் வைத்துக்கொண்டு தரிசனத்துக்குக் குயு வரிசையில்

7. தேசிகப் பிரபந்தம் - 82.