பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354 - நினைவுக் குமிழிகள்-2

மாணிக்கவாசகர் திருவெம்பாவையை இத்தலத்தில் தான் அருளினார். ஞானசம்பந்தர், நாவுக்கரசர் ஆகிய இருவரின் பாடலும் இத்தலம் பெற்றுள்ளது. இது தவிர திருப்புகழ், அருணகிரி அந்தாதி, அண்ணாமலை வெண்பா, சோணசைலமாலை, அருணைக் கலம்பகம் முதலியனவும் புகழ் பெற்றவை. எல்லப்ப நாவலர் இயற்றிய அருணாசல புராணம் இலக்கியச்சுவை மிக்கது. இவற்றையெல்லாம் எங்களுடன் வந்தவர்கட்கு விளக்கினேன்.

இங்கு 360 தீர்த்தங்கள் இருப்பதாகக் கூறுகின்றனர். கார்த்திகை தீபம் இங்குப் புகழ்பெற்ற திருவிழா. 10 நாட்கள் நடைபெறும். 10ஆம் நாள் காலையில் பரணி தீப தரிசனம் நடைபெறும். இத்தீப தரிசனத்தை அநுபவிக்கப் பல்லாயிரக்கணக்கான மக்கள் மாலை 3.மணியிலிருந்தே திரளுவர். இச்செய்திகளை விளக்கிக்கொண்டே மாலை 8 மணி சுமாருக்குச் சத்திரத்திற்குத் திரும்பினோம். இரவு உணவும் பகலிலேயே செய்துவிட்டதால் அதனை உண்டு துயில் கொண்டோம்.

மறுநாள் : அதிகாலையில் சத்திரத்திலேயே நீராடி வழியில் உணவு விடுதியில் சிற்றுண்டி கொண்டு இரமண ஆசிரமம் புறப்பட்டோம். ஆசிரமத்தைச் சுற்றிப் பார்த் தோம். அடிகள் தரிசனமும் கிடைக்கும் பேறு பெற்றோம். அடிகள் அருளுரை வழங்கிக்கொண்டிருந்தனர். அடியார்கள் கூட்டம் அவ்வுரையை உன்னிப்பாகச் செவிமடுத்துக் கொண்டிருந்தது. நாங்களும் ஒரு மூலையில் அமர்ந்து அருளுரையைக் கேட்டுப் பயன் பெற்றோம். சுமார் 11 மணிக்கே சத்திரத்திற்குத் திரும்பி 12 மணிக்கே உணவு கொண்டு முட்டை முடிச்சுகளுடன் இருப்பூர்தி நிலையத் திற்கு வந்துவிட்டோம். காட்டுப்பாடியை நோக்கிச் செல்லும் வண்டியிலேறி காட்டுப்பாடியை அடைந்தோம்.