பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 நினைவுக் குமிழிகள்-2

(ஸ்ை என்ற இடத்தில் கற்றார்கள் ஏத்தும் கபாலீசுவரர் கோயில் சென்றோம். இறைவனை வணங்கி மகிழ்ந்தோம். இக்கோயில் ஈசுவரனை வணங்கும்போது ஞானசம்பந்தப் பெருமான் பாம்பு கடித்து இறந்துபோன பூம்பாவை என்ற வணிகப் பெண்ணின் எலும்பைப் பெண்ணாக உயிர் பெற்றெழச் செய்த நிகழ்ச்சியை நினைவு கூர்கின்றோம்" மட்டிட்ட” (2. 47) என்ற முதற் குறிப்புடைய சம்பந்தர் தேவாரத்தின்,

மட்டிட்ட புன்னையங்

கானல் மடமயிலைக் கட்டிட்டங் கொண்டான்

கபாலீச் சரமமர்ந்தான் ஒட்டிட்ட பண்பின்

உருத்திர பல்கணத்தார்க் கட்டிட்டல் காணாதே

போதியோ பூம்பாவாய் (1)

என்ற முதற்பாடலை நாவினால் நவிற்றி கபாலீசுவரரிட மிருந்து விடைபெற்றுக்கொண்டு மயிலாப்பூர் கடைவீதியைச் சுற்றிப் பார்த்துக் கொண்டே உலகப் பொதுமறையாகிய திருக்குறளை அருளிய திருவள்ளுவர் திருக்கோயிலுக்கு (இராக்கியப்ப முதலித் தெருவில் - ரெட்டியார் இல்லத்துக்கு அருகில் உள்ளது) வந்து அவரையும் வணங்குகின்றோம்.

பகலுணவு கொண்டு சிறிதுநேரம் ஓய்வு கொள்ளு கின்றோம். மாலையில் அல்லிக்கேணி அச்சுதனைக் காணும் நோக்குடன் ஹாமில்ட்டன் பாலத்தருகிலிருந்து கிளம்பும் அரையனா (மூன்று தம்படி) டிராம் ஏறி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் இறங்கிப் பார்த்தசாரதித் திருக் கோயிலை அடைகின்றோம். . . . . . *