பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 நினைவுக் குமிழிகள்-2

எழுப்பி வருவதைக் கண் கூடாகக் காணவும் செய்கின்றோம். சிலரிடம்தான் 'அறிதோறும் அறியாமை கண்டற்றால்’’ என்ற புத்துணர்ச்சியை எழுப்புகின்றதையும் காணாமல் இல்லை.

இந்தக் காலகட்டத்தில் நான் கண்ட சில உண்மைகள்: "தமிழ் ஒரு குழந்தை மொழியன்று: சங்ககாலத் தொட்டுஏன்? அதற்கு முன்பே-எவ்வளவோ காலம் கண்டு, எத்தளையோ நிகழ்ச்சிகள் கண்டு, கருத்து வேற்றுகைளும் கொள்கை முரண்பாடுகளும் கண்டு, தொல்காப்பியர், திருவள்ளுவர், கம்பர் போன்ற மேதாவிகளையும் குழந்தை களாக அனைத்துக்கொண்டு தாய்மைப்பண்பு பெற்று வளர்ந்து வந்திருக்கும் தாய்மொழி யல்லவோ நந்தமிழ் மொழி? காலவகையால் பழையன கழியப் புதியன கண்டு வந்துள்ளது. இன்னும் புரட்சிகரமான புதுமைகளையும் காணப் போகின்றது. இம்மொழியின் இலக்கியவரலாறே இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே தொடங்கியிருக்க வேண்டும் என்பது ஆய்வு முடிவு, இந்த இருபது நூற்றாண்டு வளர்ச்சி நெறியிலும் மைல்கற்கள் உண்டு: இந்த வளர்ச்சி நெறியை இன்றும் நாம் அறியக் காட்டும் மைல்கற்கள் இவை.'

இன்னும் என் மனத்தில் எழுந்த சில உணர்வுகளையும் குறிப்பிடுவேன். "தமிழ்வளரும் புதியபுதிய துறைகளில் எல்லாம் தமிழின் உயிர்நாடி பேச வேண்டும். சங்க இலக்கியங்களில் கொலுவீற்றிருக்கும் அரசிளங் குமரியின் அதிகார முத்திரை வேண்டும்; தமிழ் தமிழாக வளர வேண்டும். நம் இலக்கிய வளர்ச்சி நெறியைச் சிறிதும் அறிந்து கொள்ளாமல் பிற இலக்கியங்களின் உதவியால் மட்டிலும்

2. குறள்-110 (புணர்ச்சிமகிழ்தல்)