பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378 நினைவுக் குமிழிகள்-2

என்னைப்பற்றி அறிமுகம் செய்யும்போது இவர் என் மாப்பிள்ளை. துறையூர் ஜமீன்தார் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர். நன்கு தமிழ் கற்றவர். வித்துவான் பட்டமும் பெற்றுள்ளார்..............." இப்படி அடுக்கிக் கொண்டே போனார். வித்துவான் எதற்கு?’ என்று குறுக்குக் கேள்வி கேட்டார் டி.கே.சி. உடனே நான், 'ஏதோ தமிழ் படித்தேன். ஆசிரியத் தொழிலிலுள்ள எனக்குத் தொழில் முன்னேற்றத்திற்குப் பயன்படும் என்று கருதி தேர்வு எழுதி பட்டமும் பெற்றேன்' என்றேன். ' அது சரி; ஆனால் எல்லாம் கற்றுலிட்டோம் என்ற தலைக் கனம் இல்லாதிருந்தால் சரி' என்று புன்முறுவல் பூத்தார். உடனே நான், 'ஐயா, பி.ஏ. (Bachelor of Arts) என்பதற்கு தாங் கள் ஓரிடத்தில், தங்கள் எழுத்தில், "கலையுடன் திருமண மாகாதவர்கள்’ என்று கூறியுள்ளதையும், பி.ஏ. பட்டத் திற்குப் பிறகுதான் படிக்க வேண்டியவை நிறைய உள்ளன; இனி, படித்தால் அவை புரியும் என்பதற்கு அறிகுறி இது என்பதையும் நினைவூட்டி, இக் குறிப்பு என்னை உய்விக் கின்றது' என்று எடுத்துக்காட்டினேன். 'இதையும் நீங்கள் தெரிந்து வைத்திருக்கின்றீர்களா?' என்று கூறி மகிழ்ந்தார். கம்பன் விழாவுக்கு முதல் நாளே டி.கே.சி. காரைக்குடிக்கு வந்துவிட்டார்.

அழகப்பா கல்லூரி வளாகத்தில் திரு. தொ.மு. பாஸ்கரத் தொண்டைமானின் மருமகன் திரு. V.K.C. நடராசன் (பொருளாதார விரிவுரையாளர்) தங்கியிருந்தார். அவருடைய இல்லத்தில் தங்கினார் டி.கே.சி. அடியேனும் அங்குத்தான் தங்கினேன். இதனால் திரு. தொண்டை மானின் நட்பும் ஏற்பட்டது. வி.கே.சி. நடராசனின் தொடர்பும் கிடைத்தது. வந்த நாள் மாலையிலேயே அமராவதி புதுாரில் திரு.சொ. முருகப்பா-மரகதவல்லி இவர் களால் மிகத்திறமையாகவும் பாசத்துடனும் நடத்தப்பெற்று