பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 நினைவுக் குமிழிகள்-2

களையெலாம் சிவலிங்கம்; கனியெலாம்

சிவலிங்கம்; கனிகள் ஈன்ற

சுளையெலாம் சிவலிங்கம்; வித்தெலாம்

சிவலிங்கம்; சொரூப மாக

விளையுமொரு குறும்பலவின் முளைத்தெழுந்த சிவக்கொழுந்தை வேண்டு வோமே."

இந்தப் பாடலை விளக்குவதற்குமுன் தம் முன்னிருப்பவர் களை மானசீகமாகக் குற்றாலத்திற்குக் கொண்டுபோய் விடு கின்றார். அந்தச் சூழ்நிலையைத் திரும்பப் படைத்துவிடு கின்றார். நாம் கோவிலுக்குள் சென்று குற்றாலத் தீசரை வணங்கும் பிரமையையும் ஏற்படுத்தி விடுகின்றார், தல விருட்சம் குறும்பலாவையும் காட்டுகின்றார். அதில் தொங்கும் பல பலாக் கணிகளையும் காட்டுகின்றார்.பழத்தை உரித்துக் காட்டும்போது திரிசுடராசப்ப கவிராயர் கண்டு அநுபவித்தசிவலிங்கங்களையே காட்டிவிடுகின்றார். கார்த்த வீரியார்ச்சுனன் ஆயிரம் சிவலிங்கங்களை வைத்து ஒரே காலத்தில் வழிபட்டதாகக் காவியங்களில் படித்துள்ளோம். இங்கு நூற்றுக்கணக்கான பலாக்கனிகளில் ஆயிரக்கணக்கான சிவலிங்கங்களை நமக்குக் கற்பனையில் காட்டுகின்றார். பாடல்களைத் தமக்கேயுரிய பாணியில் வெவ்வேறுவிதமாகப் பாடிப்பாடித் தாம் அநுபவிக்கின்றார். ஊதுவத்திப் புகை போன்ற வாசனைப் புகையைப் பம்பால் அறைமுழுதும் அனுப்புவதுபோல், டி.கே.சி.யின் திருவாயினின்றும் புறப் படும் ஓசையநுபவம், பொட்டாசியம் பெர்மாங்கனேட் ஸ்படிகத்துண்டுகள் கண்ணாடி சாடியிலுள்ள நீரில் சிறிது சிறிதாகக் கரையும்போது கண்களால் காணும் காட்சிபோல, சொற்களிலிருந்து புறப்படும் நேர்ப்பொருள்கள், தொனிப் பொருள்கள் நம் கற்பனையுடன் கரைந்து, கலந்து, நம்

1. திருக் குற்றா. குறவஞ்சி - 3.