பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்குடி-கம்பன்திருநாள் 381

சிந்தையில், சிந்தனையில் படியும்போது அற்புதமான கவிதாதுபவம் பெறுவதை அறிகின்றோம். விழா முடிந்து கூட்டம் கலையும்போது பலர் இப்பாடலை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே அநுபவித்துப் போனதை நேரில் கண்டேன்; வியப்புற்றேன்.

கம்பன் திருநாள் அப்போது மீனாட்சி மகளிர் உயர் நிலைப்பள்ளி ஆடுகளத்தில் பெரிய கொட்டகை போட்டு மேடை அமைத்து அதில் நடைபெற்றது. மூன்று நாட்கள் இக்கொட்டகையிலும் நான்காம் நாள் நாட்டரசன் கோட்டை கம்பன் சமாதியிலும் நடைபெற்று வந்தது. நான்கு நாள் நிகழ்ச்சிகளை அமைப்பதில் கணேசனுக்கு நிகர் கணேசனே. அற்புதமாக அமைத்துவிடுவார். இந்த மூன்று நாட்கள் இரவில் கல்லூரி வளாகத்தில் திரு. நடராசன் இல்லத்தில் தங்கியிருந்தேன். காலையில் எல்லோருக்கும் சிற்றுண்டி அனுப்புவார் சா.க. அழைத்துப்போக வண்டி வரும் (4 கி.மீ). பகல் உணவு சா.க. வீட்டில்; அங்கேயே ஒய்வு; மாலை சிற்றுண்டி முடிந்தபின் விழா தொடங்கும். இரவு 8 மணிக்கு உணவு 9மணிக்கு வளாகத்திற்குத் திரும்பி விடுவோம்.

முதல் நாள் விழாவில் டி.கே.சி, தலைவராகவோ, தொடங்குபவராகவோ இருந்ததாக நினைவு. 43 ஆண்டு கட்கு முன் நிகழ்ந்தது. இது; நினைவிலிருந்தவரை எழுது கின்றேன். டி.கே.சி.யின் பேச்சு என்னை நன்கு கவர்ந்தது. கூட்டத்தில் அவர் எடுத்துக்காட்டி விளக்கிய பாடல்:

கானாள நிலமகளைக் கைவிட்டுப் போனானைக் காத்துப் பின்பு

போனானும் ஒருதம்பி, போனவர்கள்

வரும்அவதி போயிற் றென்னா