பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384 நினைவுக் குமிழிகள்-2

பெறும் போது சா. கணேசன் அலரும் நிலையிலுள்ள செந் தாமரை மொட்டினை இலிங்கத்தின் மீது மிக்க பக்தியுடன் வைப்பார். 108 மொட்டுகளை வைத்து வழிபாடு நடத்து வதற்கு கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் ஆகும். மாலை ஐந்து மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்கும். ஒரு தலைவர், நான்கு பேச்சாளர்கள் கடமைகளை முடிப்பதற்கு சுமார் 24 மணி நேரம் ஆகும், 8 மணிக்கு இரவு உணவுடன் விழா நிறைவு பெறும். ஆண்டுதோறும் விழா இங்கு இங்ங்ணம் நடைபெற்று வருகின்றது. நான் முதன் முதலாகக் கலந்து கொண்டது பத்தாவது திருநாள் என்பதாக நினைவு.

அன்றிரவு அதிகாலையில் நாட்டரசன் கோட்டை நிலையத்திற்கு பெரும்பாலோர் வாகனங்களில் கொண்டு இறக்கப் பெறுவர். அவரவர்கள் அவரவர்கள் போக வேண்டிய இடத்திற்குப் போய்விடுவார்கள். நான் சுமார் அதிகாலை ஐந்து மணிக்கு வண்டியேறி சுமார் முற்பகல் ஒன்பது மணிக்குத் திருச்சி வந்தடைந்தேன். என் நண்பர் வழக்குரைஞர் திரு. G. M. விருத்தாசலம் வில்லியம்ஸ் சாலையில் பிளாஸா சினிமாக் கொட்டகைக் கருகில் குடியிருந்தார், அவர் இல்லம் சென்று நீராடிவிட்டு ஆடை களை மாற்றிக்கொண்டு துறையூர் வந்து சேர்ந்தேன், காரைக்குடிப் பயண அநுபவம் என்றும் என் மனத்தில் பசுமையாக இருக்கும் சிறந்த அநுபவமாக அமைந்து விட்டது.

குமிழி-107 43. எதிர்பாராத நிகழ்ச்சி

காலைப் பிடித்தேன் கணபதி!

நின்பதம் கண்ணி லொற்றி