பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளி வளர்ச்சியில் இரண்டாம் ஆண்டு 33

வகுப்பிலும் ஆறாம் வகுப்பிலும் இரண்டிரண்டு பிரிவுகள் உண்டாயின; தமிழாசிரியர், ஒவிய ஆசிரியர், உடற்பயிற்சி ஆசிரியர்களைத் தவிர, ஐவர் தேவைப்பட்டனர். தஞ்சை மாவட்டத்தில் நன்னிலம் வட்டத்தைச் சேர்ந்த கே. சேதுராமன் என்பவர் ஓவிய ஆகிரியர்க்குரிய எல்லாவிதத் தகுதியும் பெற்றிருந்ததால், அவர் நியமனம் பெற்றார். உடற்பயிற்சி ஆசிரியருக்குத் தக்கவர் ஒருவரும் கிடைத்திலர், யாரோ ஒய்வு பெற்ற (படிப்பு முதலியவற்றில் தகுதியற்ற) ஒருவரை நியமித்துக் கொண்டோம். நானும் ஜி. கிருட்டிண மூர்த்தி அய்யரும் அறிவியலாசிரியர்களாதலால் அவருக்கு எதிர்காலம் சரியாக இராது என்று கருதி பணியிலிருந்து விலகிக் கொண்டார். .

புதிதாகத் தொடங்கப்பெற்ற பள்ளி வளர்ச்சியில் தன்றாக உழைக்கக் கூடிய ஒரு சில இளைஞர்கள் ஆசிரியர்க் குழுவில் இடம் பெற்றால் சிறப்பாக இருக்கும் என் என் மனம் கருதியது. எப்படியிருந்தாலும் குறைந்த ஊதியத் திற்கு எவர் வருகின்றாரோ அவரை நியமித்துக் கொள்ள வேண்டும் என்று தாளாளர் துரை கருதினார். இந்த நிலையை எப்படிச் சமாளிப்பது என்று என் மனம் சிந்தித்துக் கொண்டு இருந்தது. வகுப்புகளின் எண்ணிக்கை கூடும் என எதிர்பார்த்து, நிர்வாகத்திற்குத் தெரிவித்து விட்டு: குளித்தலை வட்டத்தில் தொடக்க நிலைப்பள்ளியொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த P. மாத்ருபூதம் என்ற என் அரிய நண்பருக்கு எழுதினேன். அவரும் தொடக்க நிலைப் பள்ளிப் பணியினின்றும் தம்மை விலக்கிக் கொண்டு துறையூர் வந்து விட்டார். இவர் முசிறியைச் சார்ந்தவர்: உயர் நிலை" பள்ளியில் வகுப்புத் தோழர். கல்லூரிப் படிப்பில் என்னுடன் சேர்ந்து பயிலவில்லை: திருச்சி தேசியக் கல்லூரியில் சேர்ந்து பயின்று இடைநிலைத் தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வி

நி-3 - + .