பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் ஆண்டின் சிறப்பு நிகழ்ச்கிகள் 41

கல்வியதிகாரியின் அலுவலகத்தில் தலைமை எழுத்தராகப் பணிபுரிந்த எல். கணபதி அய்யரைச் சந்தித்துப் பள்ளி முன்னேற்றத்தில் உதவுமாறு வேண்டினேன். இவர் கையூட்டு வாங்குவார்; வற்புறுத்தி வாங்குவதில்லை. நாமே தந்தால் மகிழ்வுடன் வாங்கிக் கொள்வார். 'உங்கள் தாளாளருக்கு ஒன்றும் தெரியாது. அவர் ஸ்பேட் ராஜா' போன்றவர். நீங்கள் அடிக்கடி வாருங்கள்; உற்சாகமான இளைஞர்போல் காணப்படுகின்றீர்கள். நீங்கள்தான் பள்ளியை முன்னேற்றப் பாதையில் கொண்டு செலுத்த வேண்டும். சங்கோசப்படாமல் அடிக்கடி வாருங்கள்' என்று அன்புடன் கூறினார். நிர்வாகத்தின் இசைவு பெற்றுக் காகித உறையில் அழைப்பு போல்’ போட்டுத் தந்த ஐந்து-ஐந்து ரூபாய்த் தாள்கள் செய்த வேலையை முதன்முதலாக அன்று தான் அறிந்து கொண்டேன். இவரை L. G. பெருங்காயம் என்று பலர் சாட்டுப் பெயரிட்டு வழங்குவதுண்டு. உணவுப் பொருள்களில் பெருங்காயம் ஒன்றல்லவா?

இப்போது வந்த வேலை: மாணாக்கர்களின் இருக்கை வசதிகள் ஆசிரியர்களின் இருக்கை வசதிகள், அலுவலகத் திற்கு வேண்டிய அலமாரிகள், மேசைகள், நாற்காலிகள் இவற்றிற்காக விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முறைகள் இவற்றை அறிந்துகொள்வதற்காகவே வந்தேன். அவரும் மூன்று பேரிடம் உத்தேச விலைகள் அடங்கிய குறிப்புகளுடன் விண்ணப்பம் அனுப்புமாறு பணித்தார். அவர் சொன்ன முறைப்படியே விண்ணப்பம் தயாரித்து மூன்று பேரிடம் பெற்ற குறிப்புகளைச் சேர்த்து அனுப்பினேன். மானியம் கிடைத்துவிடும் என்ற உறுதியளித்தமையால் மரவேலையைத் தொடங்கி சாமான்களைத் தயாரிக்கும் பணியில் இறங்கி னேன். சின்னதுரையின் பங்களாவில்தான் தச்சு வேலை மிகவும் சுறுசுறுப்பாக நடைபெற்றது.