பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் ஆண்டின் சிறப்பு நிகழ்ச்சிகள் 43

குரைஞராக அநுபவம் இருந்தும், நடைமுறையில் குழு பற்றிய செய்தி விவரம் கூட அறியாதிருந்தமையும்; எனக்குப் புலனாயிற்று. ஒருகால் தாம் பிறரை நாடினால் "இஃதுகூட அறியாதவர் ஒரு வக்கீலா! என்று நினைப்பார்களோ என்று கருதித்தானோ பிறரை அணுகவில்லை போலும் என்று நினைத்துக் கொண்டேன். சட்ட நூல்களில் கூட இஃது இருக்குமிடம் 'அறியார் போலும் என்று என் இளைஞனின் மனம் எண்ணியது.

குழு பதிவாவதுபற்றிக் கணபதி அய்யரிடம் யோசனை கேட்டேன். ' உங்கள்:பள்ளி மேலாளரும் காளாளரும் வழக்குரைஞர்களாயிற்றே. அவர்களுக்குத் தெரியாதா என்ன?’ என்று சொல்லி ஒருபக்க வாயோரப் புன்முறுவல் செய்தார். இஃது என் பள்ளித் தலைவர்களின் அறி யாமையைக் கிண்டல் செய்வது போலிருந்தது. அவர் நினைத் தால் ஈ.ஆர். உயர் நிலைப் பள்ளி, பொன்னையா உயர் நிலைப் பள்ளி, சிரீரங்கம் உயர் நிலைப்பள்ளி பற்றிய கோப்பு களினின்று நகல் எடுத்துத் தந்திருக்கலாம். அலுவலகத்தின் பழைய கோப்புகளினின்றும் இதைத் தேடியெடுப்பது மொகஞ்சதரோ-ஹரப்பா நாகரிகத்தைக் காண மறைத்திரு ஹெராஸ் செய்த முயற்சி போலாகிவிடும். நானும் மேலும் மேலும் அவரை:நச்சரிக்க நேரிடும் என்று கருதித் தம்மை அப் பொறுப்பினின்றும் நழுவச் செய்து கொண்டார். ஆனால் தானாகக் கண்டறியும் முறையைப் (Heuristic method) பின் பற்றி அறிந்து கொள்ளட்டும் என்று கருதியோ என்னவோ நீங்கள் ஈ.ஆர். உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் (இவர் தாளாளரும் கூட) திரு. நடராச அய்யரை நாடுங்கள்: அல்லது பொன்னையா உயர்நிலைப் பள்ளித் தலைமை யாசிரியரைக் கேளுங்கள்’’ என்று கோடிட்டுக் காட்டி விட்டார். இதில் அவருக்கு உதவ விருப்பம் இல்லை என்பதை அவர் பேசிய முறையினின்றும் முகத்தை