பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 நினைவுக் குமிழிகள்-2

ஒரு விதமாகத் திருப்பிக் கொண்டு பேசின பாவனையி. லிருந்தும் என்னால் அறிந்து கொள்ள முடிந்தது. சிரீரங்கம் உயர்நிலைப் பள்ளியை அவர் குறிப்பிடாதது அங்கு தாளாள் ராக இருக்கும் மலை முழுங்கி மகாதேவன் திருமாத்ருபூதம் அய்யரை அசைத்து என்னால் அறிந்து கொள்ள முடியாது என்று கருதித்தான் என்னை அங்கு அனுப்ப மனமில்லாத வராக இருந்தார் என்பதை என்னால் ஊகம் செய்து கொள்ள முடிந்தது.

பொன்னையா உயர் நிலைப் பள்ளித் தலைமை யாசிரியர்ை நான் அறியேன். இந்தப் பரந்த உலகில் தாய் தந்தையன்ரத் தவிர எல்லோரும் புதியவர்கள்தாம். ஒவ் வொருவரையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தால் அறிந்து கொள்ளுகின்றோம். அடிக்கடி பழகுவதால் சிலர் நமக்கு நன்றாகத்தெரிந்தவராகின்றனர். ஏதோ ஒரு சந்தர்ப்பத் தில் பழகிப் பிறகு அடிக்கடிப் பழகும்வாய்ப்பில்லாதவர்கள் சிறிதளவு அறிமுகமானவர்களாகின்றனர்” என்று என் மனம் எண்ணியது. வழக்கம்போல் துணிவையே துணையாகக் கொண்டு பொன்னையா உயர்நிலைப் பள்ளியை நோக்கிச் சென்றேன். தலைமையாசிரியரிடம் (இவர் பெயர் கூட இப் போது நினைவில்லை) என்னை அறிமுகம் செய்து கொண்டு என் கோரிக்கையை அவர் முன்வைத்தேன். நகைமுகத்துடன் என்னை வரவேற்றவிதம், குளிர்ந்த பானம் நல்கிய பாங்கு, அமைதியாகப் பேசிய முறை இவையெல்லாம் என்னை மிகவும் கவர்ந்தன. அவரும் என்னுடைய சுறுசுறுப்புத் தன்மை, துணிவான போக்கு, அவரை அண்மி நாடிய முறை இவையும் அவர் மனத்தைக் கவர்ந்திருக்க வேண்டும். ‘இன்றைக்கு இங்கு வந்த காரியம் பழம்' என்று என் மனம் சிந்தித்துக் கொண்டிருந்த போது, மிஸ்டர் கண்ணப்பன், நமது பள்ளி பதிவு செய்யப் பெற்ற பத்திரத்தைக் கொண்டு வாரும்' என்று எழுத்தருக்கு ஆணையிட்டார். அவரும்