பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் ஆண்டின் சிறப்பு நிகழ்ச்சிகள் 45

உடனே அதனைக் கொணர்ந்து மேசை மீது வைத்தார். "மிஸ்டர் கண்ணப்பன், இவர் (என்னைக் காட்டி) துறையூர் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் மிஸ்டர் ரெட்டியார். இவருக்கு இந்தப் பத்திரத்தின் நகல் ஒன்று வேண்டுமாம். விரைவாக நகலொன்றைத் தட்டச்சு செய்து கொண்டுவாரும்’ என்று ஆணையிட்டார். அரைமணி நேரத் தில் நகல் என் கைக்கு வந்தது. இன்று நரி முகத்தில் விழித்த தாக நினைத்துக் கொண்டேன். தலைமையாசிரியரிடம் விடைபெற்றுத் திரும்பினேன். இப்பள்ளியின் பத்திரம் கம்பெனி சட்டப்படி பதிவு செய்யப் பெற்றிருந்தது, குறைந்தது 20 பேர்கள் குழுவில் இருக்க வேண்டும் என்பதை அறிந்தேன். இது துறையூர்ப் பள்ளிக்குச் சரிப்பட்டு வராது என்று நினைத்துக் கொண்டேன். சின்னதுரையின் உள்ளத்தை நன்கு அறிந்து கொண்டவனல்லவா?

அடுத்து, நடராச அய்யரை நாடினேன். அவர் அதிக மாகப் பேசும் பழக்கமுடையவர். யாருடனோ ஏதோ "அரட்டை அடித்துக் கொண்டிருந்தார். என்னை அறிமுகப் படுத்திக் கொண்டு என் கோரிக்கையை வெளியிட்டேன். அவர் என்னை மேலும் கீழுமாக நோட்டம் விட்டுப் பார்த் தார். என் தோற்றத்தைக் கண்டே என்னை அளந்துவிடுவார் போல் தோன்றியது. அப்போது என்னைப் பார்த்தால் ஒரு கல்லூரி மாணவன் போல் காணப்படுவேன். இன்றைய கல்லூரி மாணவனை நினைத்துக் கொள்ள வேண்டா என்பது என் பணிவான வேண்டுகோள். நான் வயதில் குறைந்தவனாக இருந்தாலும், ஏற்றுக் கொண்ட பதவி யினால், பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டிய பாங்கினால், கம்பீரமாகக் காணப்படுவேன். இதனைக் கண்டு தான் திரு நடராச அய்யர் என்னை மேலும் கீழுமாகப் பார்த்து என் உள்ளத்தை அளந்து கொண்டாரோ என்று நினைத்துக் கொண்டேன். என்னைப் பார்த்தவர் வேறு