பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னேற்றப் பாதையில் தகுதி பெறல் 49

அன்றாட நடைமுறையிலுள்ள செய்திகளை விதிகளுடன் பொருத்திக் காட்டி விளக்கினதால் தேர்வுபற்றிய பல செய்திகள் என் மனத்திற்கு அற்றுபடியாயின. புத்தகத் தோடு காணப்பெறும் பல செய்திகள் என் நடைமுறை அநுபவங்களாயின. பல்வேறு சாமான்கள் பல்வேறு அரசுத் துறைகளில் வாங்க நேரிடும்போது எந்த நிலையிலுள்ள அதிகாரிகளின் இசைவு பெறவேண்டும்? என்பது போன்ற வினாக்கட்கு அநுபவசாத்தியமாகக் காட்டிக் கொடுத்தார். இதற்கு விடையிறுக்கும்போது அதிகாரியின் பதவிப் பெயர் (Designation) இதற்குச் சான்றாக நூலிலுள்ள விதிகளின் எண் குறித்துக் காட்டினால் போதும். 60 மதிப்பெண்களை யுடைய வினாத் தாளில் இம்முறை வினாக்கட்குச் சரியாக விடையிறுத்தால் 15 மதிப்பெண்கள் பெற்றுவிடலாம்.

இவற்றைத் தவிர, ஒரு பெரிய கணக்கு ஒன்று கேட்கப் பெறும். இஃது ஒர் அதிகாரி பயணப்படியைக் கணக்கிடுவது பற்றியது. இதில் இரண்டு வகை உண்டு. ஓர் அதிகாரி ஆய்வுக்காகப் பல இடங்கட்குப் போகும்போது (a)இருப்பூர்தி யில் (b) பேருந்தில் (c) குதிரை வண்டியில் போக நேரிடலாம். இந்தப் பயணத்தில் ஒவ்வொரு பயண ஊர்தியிலும் செல்லும் தொலைவு கொடுக்கப்பெற்றிருக்கும். இவர் பெரிய நகரங் களில் தங்கும் நாட்களின் எண்ணிக்கை, சிறிய ஊர்களில் தங்கும் நாட்களின் எண்ணிக்கை தரப்பெற்றிருக்கும். இந்த அதிகாரியின் பயணப் படியைக் கணக்கிட்டுக் காட்டி அவற்றிற்குரிய பல்வேறு விதிகளையும் சான்றுகளாகக் குறிப்பிடல் வேண்டும். இஃது ஒரு வகை.

மற்றொரு வகை இது. ஓர் அதிகாரி சிறிய நகரத்தி விருந்து பெரிய ந்கரத்திற்கும் பெரிய நகரத்திலிருந்து சிறிய நகரத்திற்கும் மாற்றப் பெறுகின்றார். டிசம்பர் மாதத்தில் அவருடைய மகள் எங்கோ ஓரிடத்திலும் மகன் பிறிதோர் நி-4 - -