பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செருகு கவிகள் 9置 தாக்கிய பகழிக் கூர்வாய் தடிந்தபுண் தழும்பும் இன்றிப் போக்கினன் தழுவிப் பல்கால் பொற்றடம் தோளின் ஒற்றி - டிெ 78: தழுவிக்கொண்ட இராமன் என்ன செய்கின்றான்? அம்பறாத் துரணியை அவிழ்க்கின்றான். கவசத்தைக் கழற்றுகின்றான். தம்பியின் உடலில் பாய்ந்திருந்த அம்பு களைப் பிடுங்குகின்றான். பிறகு ஆயிரம் முறை கட்டிக் கட்டித் தழுவுகின்றான். அந்த அன்புக் கடலில் திளைத்த இலக்குவன் புண் ஏற்பட்ட உணர்ச்சியும் தழும்பு உண்டு என்ற உணர்ச்சியும் அற்று அன்புமயமாகி விடுகின்றான். இதற்குப் பிறகுதான் இராமனின் வாய் திறக்கின்றது: பேசுகின்றான். ஆடவர் திலக! நின்னால் அன்று;இகல் அநுமன் என்னும் சேடனால் அன்று; வேறோர் தெய்வத்தின் சிறப்பும் அன்று வீடணன் தந்த வெற்றி ஈது என விளம்பி மெய்ம்மை ஏடு.அவிழ் அவங்கல் மார்பன் இருந்தனன் இனிதின், இப்பால் - -டிெ 71. இராமன் இலக்குவன் தோளைத் தழுவிக் கொண் டிருக்கும் போதே இந்த வெற்றிக்குக் காரணர் யார் என்று உள்ளம் எண்ணுகின்றது; மெய்ப்பாடு முற்றுப் பெறும் இடம் கண்டு வாய் தானாகப் பேசுகின்றது. இந்த வெற்றிக்கு இலக்குவன் செயல், அநுமன் உதவி, தேவர் ஆசி எல்லாம் காரணங்களாக இருந்தாலும் வீடணனாலேதான் வெற்றி கிட்டியது என்று ஒரு வார்த்தை சொல்லு: