பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఇ இந்து மதாபிமான சங்கம் . 107. தலைமையேற்றுப் பேசியுள்ளனர். நான் காரைக்குடி சென்ற பிறகு இந்தச் சங்க விழாக்களில் பண்டிதமணி கதிரேசச் செட்டியார், டாக்டர் ஏ.சி. செட்டியார், சுவாமி சித்பவாநந்தர், பன்மொழிப் புலவர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், செல்வி இ. தெ. இராஜேசுவரி அம்மையார், வள்ளல் அழகப்பச் செட்டியார், தொழி லதிபர் தியாகராசச் செட்டியார் போன்ற புலவர் பெரு மக்களும் வள்ளல்களும் தொழிலதிபர்களும் பங்கு கொண்டு சிறப்பித்ததை நேரில் கண்டவன். தொடக்கக் காலத்திலிருந்தே நான் பொது மேடையில் பேச விரும்பாதவன். காரைக்குடியிலிருந்தபோது சுற்றுப் புறங்களில் உள்ள சிற்றுார்ப் பள்ளிகளில்தான் பேசி உள்ளேன். ஒரு சமயம் சா. கணேசன் வற்புறுத்தலின் பேரில் கம்பன் திருநாள் நிகழ்ச்சியில் கம்பன் படைத்த சிறு பாத்திரங்கள்' என்ற தலைப்பில் தாரையைப் பற்றிப் பத்து மணித்துளிகளும், இந்து மதாபிமான சங்கச் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒன்றில்வள்ளல் அழகப்பர் தலைமையில் சமய வானில் துருவ மீன்' என்ற தலைப்பில் 30 மணித்துளிகளும் முருகப்பனார் இயற்றிய பாலகாண்ட வெளியீட்டு விழா வில் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையின் தலைமையில் பதினைந்து மணித் துளிகளும் பேசியதாக நினைவு. அதன் பிறகு கும்பகோணத்தில் நடைபெற்ற ஒரு சைவ மாநாட்டில் ராய. சொ. தலைமையில் 30 மணித் துளிகள் பேசினேன். 1948-இல் நான் துறையூரிலிருந்தபோது பள்ளி ஆண்டு விழாவில் மு. வ. அவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தேன். அவருடன் உரையாடிக் கொண்டிருந்த போது, ரெட்டியார், நான் பொதுவாகப் பேச விரும்புவ தில்லை. நான் படிப்பவன்; எழுதுபவன். அமைதியான போக்கை விரும்புபவன். நீங்கள் வற்புறுத்தியதன்பேரில் நீங்கள் தொடங்கிய பள்ளியில் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள அழைத் தீர்கள். உங்கள் அன்புக்குக் > பட்டேன்; ஒப்புக்கொண்டேன். ஒருநாள் நிகழ்ச்சியானா