உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

и по - - - நினைவுக் குமிழிகள்-3 உண்மையே தாரகமென் றுணர்ந்திட்டார் அன்பொன்றே உறுதி யென்பார் வண்மையே குலதர்ம மெனக் கண்டார்; தொண்டொன்றே வழியாக் கண்டார்; ஒண்மையுயர் கடவுளிடத் தன்புடையார்; அவ்வன்பின் ஊற்றத் தாலே திண்மையுறும் இந்துமத அபிமான - சங்கமொன்று சேர்த்திட் டாரே. (6) இந்தச் சங்கத்தில் ராய.சொ. என்னை உறுப்பின ராக்கி விட்டார். பின்னர் நிர்வாக சபையிலும் சில ஆண்டுகள் பணி புரிய வாய்ப்பளித்தார். நான் காரைக்குடி யில் இருந்த பத்தாண்டு காலத்திலும், அதற்குப் பிறகு திருப்பதியிலிருந்து குடும்பத்தைப் பார்க்க விடுமுறைக் காலங்களிலும், அதற்குப் பிறகு தாம் மறையும் வரை யிலும் சொ. முரு. ராய. சொ., சா. க. இவர்கள் என் னிடம் அளவற்ற பற்றுக் கொண்டிருந்ததை நினைவு கூர்கின்றேன். எல்லாத் தமிழாசிரியர்களிடமும் இவர்கள் நிறைந்த அன்புடையவர்கள்தாம். ஆனால், நான் இவர் களிடம் மிகவும் நெருங்கிப் பழகினமையால் இவர்கள் என் மீது தனியன்பு காட்டி வந்தது இன்றும் (1989) என் மனத்தில் பசுமையாக உள்ளது. . சங்கத்துச் சான்றோர்கள் : இந்து மதாபிமான சங்கத்தின் தலைவராகப் பல் ஆண்டுகள் இருந்தார் ராய.சொ. ஆண்டுதோறும் தேர்தல் நடந்தாலும் எல்லோரும் ராய.சொ.வையே ஒரு மனதாகத் தேர்ந் தெடுப்பார்கள். மூன்று நான்கு ஆண்டுகள் என்னை நிர்வாகச் சபைக்குத் தேர்ந்தெடுத்தார்கள். நான் 1960இல் திருப்பதிக்குப் போன பிறகு ஆறு ஆண்டுகள் காரைக் குடிக்கு அடிக்கடி (விடுமுறை நாட்களில்) வந்து போய்க் கொண்டிருந்தேன். அப்பொழுதுதான் ராய. சொ. என்னை ஆயுள் உறுப்பினராகச் சேர்த்துக் கொண்டார்.