பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 - நினைவுக்குமிழிகள்-3 அவரையே நன்றியுரையையும் சொல்லுமாறு கேட்டுக் கொண்டேன். முதல்வரும் அதை விரும்பியதைக் குறிப்பால் அறிந்து கொண்டமையால் இந்த வேண்டு கோள். அடிகளார் தமது மட வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு’ என்று முதல்வர் நன்றியுரையைத் தொடங்கும்போது மண்டபம் கைதட்டலால் அதிர்ந்து போயிற்று. உடனே முதல்வரும் அத்துச்சாரியை விட்டுப் போயிற்றா?' என்று தான் பேசுவதைத் திருத்திக் கொண்டு மடத்து வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு ' என்று பேசவே மீண்டும் கைதட்டல். ஒருவாறு நன்றியுரை முடியவே 'வாழிய செந்தமிழ்' என்ற நாட்டு வாழ்த் துடன் கூட்டமும் நிறைவு அடைந்தது. அடிகளாரும். விடைபெற்றுச் சென்றார். ఆట్రి-122 16. செட்டிகுளத் திருத்தலப் பயணம் புன்னெறி யதனிற் செல்லும் போக்கினை விலக்கி மேலா நன்னெறி யொழுகச் செய்து நவையறு காட்சி நல்கி என்னையும் அடிய னாக்கி இருவினை நீக்கி யாண்ட பன்னிரு தடந்தோள் வள்ளல் பாதயங் கயங்கள் போற்றி என்ற கந்த புராணப் பாடலைச் சிந்தையில் பதித்த வண்ணம் இக்குமிழி வெளி வருகின்றது, என் அன்னையார் நேர்த்து கொண்ட கடனைத் தீர்க்கச் செட்டிகுளப்பயணம் தொடங்குகின்றது-1 955 இல். -