பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல் முகம் தெளிவுறவே அறிந்திடுதல், தெளிவுதர மொழிந்திடுதல், சிந்தியபார்க்கே களி வளர உள்ளத்தில் ஆனந்தக் கனவுபலகாட்டல் கண்ணிர்த் துளிவரஉள் ளுருக்குதல் இங் கெவையெல்லாம் யேருளும் தொழில்களன்றோ? ஒளிவளரும் தமிழ்வாணி! அடியனேற்(கு) இவையனைத்தும் உதவுவாயே* - பாரதியா திண்ணைப் பள்ளிக்கூட வாழ்வில் சுமார் நான்கு ஆண்டுக் காலம் கணபதியின் தாளைக் கருத்தினில் வைக்கும் வாய்ப்புகள் இடைவிடாமல் இருந்தன. சின்னப் பிள்ளைகளாகிய நாங்கள் விடாது.அவன் புகழ்பாடின்ோம். அவனுடைய அருளால்தான் என் உட்செவி திறந்தது; அகக்கண் ஒளிர்ந்தது. அமுதமும் விளைந்தது. வித்தையும் வளர்ந்தது. வெற்றியையும் தோல்வியையும், நன்மையை யும் தீமையையும் சமமாக ஏற்கும் துணிவும் என்பால் ஏற்பட்டது. அசையா நெஞ்சமும் அருளப் பெற்றேன். எதிர்பாராத நிலையில் மனம் துன்புற்றிருந்தபோது துணிவும் என்பால் இருந்தமைக்கு அவன் அருளே காரணம் என்பதை உணர்கின்றேன். இந்நிலையில் நான்கு நாட்கள் (1949-மார்ச்சு) காரைக்குடிக் கம்பன் திருநாளில் பார்வையாளனாகக் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. இதனால் கம்பன் அடிப்பொடி’ சா.கணேசனின் நட்பு கிடைத்தது. பழகியது சிறிது காலமே. எனினும் ஒரு நாள் பழகினும் பெரியோர் கேண்மை இருநிலம் பிளக்கும் வேர் வீழ்க்கும்மே என்ற 4. பாஞ்சாலி சபதம்-சூதாட்டம்-154