பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் அடிப்பொடி --. . . f 7 g : வருபவர்கள் பதினாறு காரியக்காரர்கள். இக்காரியக் காரர்தாம் பிள்ளையார்பட்டியான திருவேட்புடையார் என்ற கோத்திரத்தவர். இவர்களே கோயில் பூசை படித்தரம் முதலியவை சிறப்பாக நடைபெறத் தங்கள் சமுதாய நிதியிலிருந்து கொடுத்து உதவுகின்றனர். கோயில் வருமானம் இவற்றிற்குப் போதாத நிலையில் உள்ளது. ’’ - மேலும் சா. க. கூறியது: ரெட்டியார், இங்கு பிள்ளையார் தோன்றுவதற்கும் ஒரு வரலாறு உண்டு. பல்லவ மன்னன் மகேந்திரவர்மன், அவன் மகன் நரசிம்மவர்மன் இவர்கட்குச் சேனாதிபதி பரஞ்சோதி. இவர்தான் சிறுதொண்டர் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். நரசிம்மவர்மன் சளுக்கிய மன்னன் புலிகேசி மேல் எடுத்த படையெடுப்பில் வெற்றி கண்டு அகப்பட்ட வற்றையெல்லாம் சுருட்டிக் கொண்டு தம் நாட்டிற்குத் திரும்பும்போது அவன் தலைநகரான வாதாபியிலிருந்து கணபதித் திருமேனியைப் பெயர்த்தெடுத்து வந்து தம் சொந்த அனுரான திருச்செங்கட்டாங்குடியில் சிவாலயத்தில் பிரதிட்டை செய்தார் பரஞ்சோதி என்பது வரலாறு. கணபதியைப் பிரதிட்டை செய்ததால் திருக் கோயில் கணபதீச்சரம் என்ற பெயரும் பெற்றது. தம்மைப் போலவே யாரேனும் வாதாபி கணபதியைத் திருச்செங் காட்டங்குடியிலிருந்து பெயர்த்தெடுத்துப் போகக் கூடும் என்ற கவலை பரஞ்சோதியாருக்கு இருந்து வந்தது. ’’ இனி பிள்ளையார் பட்டிக்கு வருவோம் என்று கூறிய சா. க பின்னும் தொடர்கின்றார். பரஞ்சோதி யின் கவலையைப் போலவே நரசிம்மவர்மனுக்கும் இந்தக் கவலை உள்ளத்தில் இருந்துள்ளது. தென்னாடு திரும்பிய நரசிம்மவர்மன் தன் தந்தை மகேந்திரவர்மன் திருச்சி, சித்தன்னவாயில் முதலிய இடங்களில் கட்டியன்