பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芷9费 நினைவுக் குமிழிகள்-3 உயர்வீர்கள்’’ என்று புகழ்ந்து பேசினார். அப்படித். தான் அந்த முட்டாள் இதைக் கண்ணாடி என்று சொல்லி விட்டாலும், இந்த ஏழை இந்தப் பெரிய முதலாளியிடம் ஒரு பத்தாயிரம் சாப்பிடக்கூடாதா?’ என்று சொல்ல. சரி சரி. போப்பா, நன்றாக இரு’ என்றுசொல்லிவிடை கொடுத்தார். பச்சைக் கண்ணாடியைப் பச்சைக்கல்’ என்று பச்சையாகப் பொய் சொல்லி ஏமாற்றி விட்டதைத் தெரிந்தும், அந்தப் பச்சையைத் தண்டவாளப் பெட்டியின் அடியில் புகலிடம் தந்து வாளா இருந்து விட்டார். பச்சையின் மீதுள்ள நம்பிக்கை - மூடப்பழக்கம்-இன்னும் தளரவில்லை. ஏ பச்சையம்மா, நீதான் இத்தகைய ஏமாறும் பேர்வழிகளைக் காப்பாற்ற வேண்டும். பச்சையை விற்கும் தரகர்களையும் காப்பாற்றுவதும் நின் கடமைதான். அவர்கள் ஏழைகலல்லவா? இந்தச் செட்டியார் என்னிடம் மிக்க அன்புள்ளவர். பல நன்மை களை எனக்குச் செய்தவர். பதினைந்து இருபது ஆண்டு கட்கு முன்னரே இவர் திருநாடு அலங்கரித்து விட்டார். இத்துடன் இது நிற்க. என் மனைவிக்கு வைரத் தோடும் வைர மூக்குத்தியும் வாங்க வேண்டும் என்ற சபலம் இருந்து கொண்டே இருந்து வந்தது. இந்த வைர வாணிகம் நடைபெற்று வருவதைக் கூர்ந்து கவனித்தேன், இராஜாஜி மதுவிலக்குத் திட்டம் நடைமுறைப்படுத்து வதால் ஏற்படும் நட்டத்தை ஈடுகட்டுவதற்கு விற்பனை வரியை நுழைத்தார். விற்பனையில் ரூபாய்க்கு ஒரு தம்படி (இப்போதுள்ள காசில் கிட்டத்தட்டப் பாதி) வீதம் வசூலிக்கலாம்; இந்தப் பணம் அரசுக்குச் சேரவேண்டியது என்ற சட்டமும வந்தது. பின்னர் வந்த அரசுகள் ஒவ்வொரு பொருள் விற்பனையிலும் விற்பனை வரியைப் பல்வேறு விதமாக உயர்த்தவே, வைர விற்பனையில் இருபது சதவிகிதத்திற்மேல் வரிவிதிக்கப் பெற்றது. இது பல்வேறு தில்லுமுல்லுகட்கு இடம் கொடுத்து விட்டது. பில் (Bill) இல்லாது. விற்பனை வரி ஏய்ப்பு.