பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்னன் கண்ட கண்ணன் 盛金象 வண்ணத்தையும் காயாம் பூ நிறத்தையும் ஒத்துள்ளது. இத் திருமேனியையுடையவன் கெளமோதகி என்னும் கதையையும், நாந்தகம் என்னும் வாளையும், திருவாழி திருச்சங்குகளையும், சார்ங்கம் என்னும் வில்லையும் தாங்கிய வண்ணம் தோற்றம் அளிக்கின்றான். மகரக் குழைகள் காதுகளில் ஆடுகின்றன. திருமார்பில் திருத் துழாய் மாலை புரண்டு திகழ்கின்றது. * மல்லாண்ட திண்டோளும் மணிக்கழுத்தும் கொவ்வைச் செவ்வாயும், காலையில் மலர்ந்த பாரிசாதம் போன்ற முகமும், சோதி அலை எறிந்து தள்ளும் திருவபிடேகமும் கூடிய நின்னை இந்தப் பிறப்பில் கானும்பேறுபெற்றேனே என்கின்றான்' என்று விளக்கும்போது பாட்டின் கருத்தை உடனே புரிந்து கொள்ள முடியாதவர்கள் புரிந்து கொண்டு மகிழ்ந் ததை நேரில் கண்டேன்; களி கொண்டேன். எல்லோருமே கன்னனாகவே மாறி ஒட்ட உணரும் உணர்ச்சியை (Empathetic reaction) QLị)ựp sơ #;3; &#rrG*T (ự L#-p #g/ . இந்தக் காட்சியில் திளைத்த கண்ணன் மேலும் பேசு வது கூடியிருந்த அனைவரையும் உணர்ச்சியின் கொடு முடிக்கு இட்டுச் சென்று விட்டதையும் காண முடிந்தது. மன நிறைவு கொண்ட கன்னனின் பேச்சு இது. இதையும் வில்லிபுத்துரார் வாக்கிலேயே கண்டு மகிழ்வோம். தருமன்மகன் முதலான அரிய காதல் தம்பியரோ டெதிர்மலைந்து தறுகண் ஆண்மைச் செறுவில்என துயிர் அனைய தோழற் காகச் செஞ்சோற்றுக் கடன்கழித்தேன்;தேவர்கோவுக்கு உரைபெறுநல் கவசமும் குண்டலமும் ஈந்தேன் உற்றபெரு நல்வினைப்பேறு உனக்கே தந்தேன்! மருதுஇடைமுன் தவழ்ந்தருளும் செங்கண் மாலே! மாதவத்தால் ஒரு தமியன் வாழ்ந்த வாறே!’ 7. 17-ம் போர் 248