பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 . நினைவுக்குமிழிகள்-3 என்ற பாடலை நாவினால் நவிற்றிக் கொண்டே அடுத்து, கொப்புடைய நாயகியை வணங்கி அருள் பெற்றுக் கிருட்டினன் ஆலையத்திற்கு வந்தேன். நாளும் பெரிய பெருமாள் அரங்கர் நகைமுகமும் தோளும் தொடர்ந் தென்னை யாளும்விழியும் துழாய்மனக்கும் தாளும் கரமும் கரத்திற்சங் காழியும் தண்டும் வில்லும் வாளும் துணைவருமே தமியேனை வளைத்துக் கொண்டே' என்ற பாடலைச் சேவித்து வழிப்பட்டேன். ஆனந்த பவன் உணவு விடுதியில் சிற்றுண்டி அருந்தி சா. கணேசன் இல்லம் வந்தடைந்தேன். இதற்குள் காலை மணி 8-30 ஆகிவிட்டது. ஒன்றிரண்டு நாட்கள்தான் திரு. கணேசன் இல்லத்தில் தங்கியதாக நினைவு. கல்லூரிக்குப் போகத் தயாராக இருப்பதைப் பார்த்த திரு. கணேசன், மிஸ்டர் ரெட்டியார், குதிரை வண்டி அமர்த்த வேண்டாம், கல்லூரிப் பேருந்துகள் மூன்று ஒடு கின்றன. இவற்றில் ஏதாவது ஒன்றில் போகலாம். நீங்கள் இந்திரா மருந்தகம் அல்லது கல்லுக்கட்டி அஞ்சல் நிலையம் என்ற ஏதாவது ஓரிடத்தில் நின்று பேருந்தில் ஏறிக்கொள்ளலாம்' என்று விவரமாக விளக்கி னார். முதல் நாள் கல்லுக்கட்டி அஞ்சல் நிலையத்திடம் நின்று கொண்டிருந்தேன். அப்போது பன்னிரண்டு ஆண்டுகட்குப் பின்னர் என்னுடன் திருச்சி புனித சூசையப்பர் கல்லூரியில் வேதியியல் பயின்ற திரு. V. V. சுப்பிரமணியம் என்பவரைக் கண்டு மகிழ்ந்தேன், தான் 2. திருவர, மாலை-காப்பு