பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 - நினைவுக் குமிழிகள்.: கோக்கவோ?’ என்கின்றான். இதனால் தான் வேறு; அவன் வேறு என்று வேறுபாடு அற்ற முறையில் பழகும். நட்புக்கு இஃதோர் எடுத்துக்காட்டு. ஆதலால்தான் செரு முனையில் செஞ்சோற்றுக் கடன் கழிப்பதுவே தனக்குப் புகழும், கருமமும், தருமமும்’ என்று கூறு இன்றான். . இருவரும் பல விஷயங்களைப் பேசுகின்றனர். பின்னர் அன்னையிடம், இப்போது பேசிப் பயன் இல்லை. போர் நடப்பது உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் நீர் இங்கு. வந்தது என் கருதி?கரவாது உண்மையை உரைத்திடுமின்!” என்று வினவுகின்றான். இதைக் கேட்டதும், பிறந்த அன்று. பிள்ளையைத் துறந்தபோது நேரிட்ட துக்கத்தைவிட இப்போது அதிக துக்கம் வந்து நெஞ்சை அடைக்கின்றது; இரு கண்களிலும் நீர் தாரைதாரையாகப் பாய அழு. இன்றாள். வாயும் குழறுகின்றது. அன்புமிக்க மகனும் அன்னையின் கண்களைத் துடைத்து, அவளைப் பல்வேறு முறையில் தேற்றுகின்றான். பின்னர், எல்லாம் வினை யினால் வருமேயன்றி முயற்சியினால் வருவது ஒன்று: மில்லை. தாங்கள் வேண்டுவன அனைத்துமே தருவேன். கேளுங்கள்’’ என்று கூற, அவளும், இரண்டு வரங்களைத் தருமாறு வேண்டுகின்றாள். இதனைக் கவிஞர், பார்த்தன்வெஞ் சமரில் நின்னுடன் மலைந்தால் பகைப்பெரும் பாந்தள்.அம் பகழி * : கோத்தலும் பிழைத்தால், மறித்தும், நீ விடுத்துக் கோறல்' என்று ஒருவரம் குறித்தாள்: "வாய்த்தமற் றவர்கள் இளைஞர்என்று அவரை மலையல்!” என்று ஒருவரம் குறித்தாள்; மூத்தவன். காதல் இளைஞர்தம் பொருட்டால் மொழிந்தமை கேட்டுஇவை மொழிவான்* டிெட255