பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 நினைவுக் குமிழிகள்-; --مع-بیس ماہیمی சிறந்த மருத்துவர் என்று நாடறிந்த புகழுடன் விளங்கினார். ஏற்கெனவே நான் அவருக்கு அறிமுக மானவன். உடலைச் சோதனை செய்து தக்க மருந்துண்ண வேண்டும் என்ற ஆவலால் உந்தப்பெற்றுப் புதுக்கோட்டை சென்று உடலைப் பரிசோதனைக்குட்படுத்தினேன். எல்லாவித சோதனைகளும் மேற்கொள்ளப் பெற்றன. X-ray Screening கூட செய்தார். எல்லாம் முடிந்தபின் முடிவு உங்கட்கு நோய் ஒன்றும் இல்லை' என்பது. காரைக்குடி மருத்துவர் பெரிபெரி நோய் என்று முடிவுக்கு வந்தார்; இவர் ஒன்றுமே இல்லை’ என்கின்றார். நான் டாக்டரிடம், ! ஐயா, எனக்கு ஆறு மாதமாகப் பசி இல்லை; ஒர் இட்டலி கூட செரிமானம் ஆவதில்லை. பால், ஹார்லிக்ஸ், போர்ன்வைட்டாவில் தான் வாழ்கின்றேன். மதிய உணவில் ரசம்சாதம் கூட ஏறவில்லையே. ஒன்றுமில்லாமல் நான் எதற்கு வந்தேன்? என் கஷ்டம் எனக்குத் தெரிகின்றது; டாக்டருக்குத் தெரியவில்லை. என்று வருந்தினேன். பிறகு அவரிடம் உங்கள் கருவிகள், முதலியவற்றால் கண்டறிய முடிய வில்லை என்றாலும், உங்கள் மூளையைப் பயன்படுத்திச் சிந்தித்து உதவுங்கள்; வழிகாணுங்கள்’’ என்றேன். 'எல்லாம் பார்த்தாய் விட்டது; ஒன்றும் புலனாக வில்லையே!' என்றார். சென்னை வந்திருந்தால் படாடோபமான சூழ்நிலையில் ஆயிரத்திற்கு மேல் செலவாகியிருக்கும். தவறான வழியில் சிகிச்சை நடந்து கொண்டிருக்கும். எண்ணெய் செலவழிகிறதுதான் மிச்சம்; பிள்ளை பிழைத்த பாடில்லை' என்ற கதை யாகத்தான் முடிந்திருக்கும். இறையருள் என்னைச் சென்னைக்கு அனுப்பாமல் காத்தது. & ,

  • நான் டாக்டரிடம், ! ஐயா, நான் ஒன்று சொல்லட்டுமா? தவறாக எடுத்துக் கொண்டு கோபித்துக் கொள்ள மாட்டீர்களே!’’ என்றேன். அவரும்,

"துணிவாகச் சொல்லுங்கள்: ஒன்றையும் மறைக்காதீர்