பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டு விழாக்கள் 笠段彦 சொன்னார்? அநுமன் எப்பது ஒரு கருத்து' (Concept). அறிவுக்கும் ஆற்றலுக்கும் குறியீடு. உளவியல் கற்ற நமக்கு விளங்கும் என்ற கருத்தில்தான் அடிகள் அந்தச் சொல்லைப் பயன்படுத்தினார், காவியத்தில் வரும் பாத்திரங்கள் யாவும் ஒரு கருத்துக்கு அடையாளமாகக் கவிஞர்கள் படைத்துள்ளனர். இராமாயணத்தில் வீடணன், இராவணன், கும்பகருணன் இம்மூவரும் சத்துவம், இராசசம், தாமசம் என்ற குணங்களின் குறி யீடுகள், அவர்தம் செயல்களும் இக் குணங்களின் பரிணாமங்களாக இருப்பதைச் சிந்தனையுடன் இராமா யணத்தைப்படிப்பவர்களே அறிய முடியும். சாதாரண மக்களுக்கு அது கதைபோல்தான் இருக்கும், இலக்கிய ஆர்வலருக்கு அது காவியச் சுவை பயக்கும். . . " இவற்றையெல்லாம் நன்கு உணர்ந்த வடமொழி வாணர்கள் தலைவன் ஏவலாளர்க்குக் கறுதல் போன்றவை அறநூல்கள் என்றும், நண்பர் ஒருவருக் கொருவர் கூறும் முறையில் அமைந்தவை புராணங்கள் என்றும், கணவனுக்கு மனைவி உரைப்பது போன்றவை காவியங்கள் என்றும் ஒரு வகைப் பாகுபாடு செய்துள் ளனர். இல்வாழ்க்கையில் சொற்களைவிட உள்ளத்து. உணர்ச்சிகளே ஆற்றல் மிக்கவை என்பதும் சொற்களால் உணர்த்துவதைவிடக் குறிப்பால் உணர்த்துவதே மிகுதி என்பதும் நாம் அறிந்தவைதாமே. இக்காரணத்தால் ஒரு சில வரிகளாலான அகத்துறைச் சங்கப் பாடல்கள் உணர்ச்சியைக் கொட்டி நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின்றன. இத்தகைய உணர்ச்சிதான் காவியங் களிலும் அமைந்து கிடக்கின்றன. ஒழுக்கம் அறம் முதலிய வற்றை அதிகமாகச் சொற்களால் கூறி வற்புறுத்தாமல் கற்பனையதுபத்தின் வாயிலாக அப்பாடல்கள் உள்ளத்தில் தாமே சென்று பதியும் முறையில் அமைந்து விடுகின்றன. வேதாந்ததேசிகரின் சங்கல்ப சூரியோதயம்' என்ற