பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிமைப் பயிற்சி முகாம்கள் 307 நினைவு. மூன்று நான்கு ஆண்டுகள் இந்த ஊரில்தான் குடிமைப் பயிற்சி முகாம் நடைபெற்றதாக நினைவு. நல்ல நல்ல நகரத்தார் விடுதிகள் இங்கு உள்ளன. பெரிய தெப்பகுளம். அதற்கு எதிரில் உள்ள ஒக்கூரார் விடுதி மிகவும் பேர் போனது; பெரிய விசாலமான கட்டடம் நூற்றுக்கணக்கானவர்கள் தங்க வசதி உண்டு. இதில்தான் மாணவர்கள் தங்க ஏற்பாடு செய்தோம். இதற்கு நேர் மேற்கில், தெப்பகுளத்தை அடுத்து ஒர் பிள்ளையார் கோயில். இதனை அடுத்துள்ள பெரிய விடுதியில்தான் உணவுக்கு ஏற்பாடு செய்தோம்; ஆசிரியர்கள் தங்குவதும் இந்த இடத்தில்தான். (பெரும்பாலும் செட்டியார்கள் விடுதிகளையொட்டி பிள்ளையார் கோயிலும் அதனையொட்டி ஒரு பெரிய தெப்பகுளமும் இருக்கும். யானை நீர் இருக்கும் இடத்தில் தான் இருக்கப் பிரியப்படுமாதலால் கோயிலுக்கருகே குளத்தை அமைத்தனர் போலும்) இராமநாதபுரம் மாவட்டம் (இப்போது அது பசும் பொன் முத்துராம லிங்க தேவர் மாவட்டமாயுள்ளது) வறண்ட பிரதேச மாதலால் இக்குளங்களில் பெரும்பாலும் நீர் பெருகி இருப்பதில்லை . பெரும்பாலும் செட்டியார்கள் வசமுள்ள இளையாற்றங்குடி, மாற்றுார், வைரவன்பட்டி, இரணியூர் பிள்ளையார் பட்டி, நேமம், இலுப்பைக்குடி, சூரைக்குடி, வேலங்குடி என்ற ஒன்பது ஊர்களிலும் பிள்ளையார் கோயில்களே பிரதானமாக அமைந்திருப்பது என்னைச் சிந்திக்க வைக்கின்றது : - என் சிந்தனை இப்படி ஒடுகின்றது. இந்தியாவில் தோன்றியுள்ள சமயங்கள் அனைத்திற்கும் பொதுவாய் எழுந்தருளியிருக்கும் தெய்வம் கணபதி. இத்தெய்வத்தின் துணை கொண்டுதான் மக்கள் தத்தம் தெய்வத்தை வணங்குகின்றனர். தெய்வ வழிபாட்டிற்கு இடந்தராத புத்தசமயத்திலும் கனநாதனுக்கு இடம் உண்டு.பெளத்தத் திருக்கோயில்களில் சென்று பார்த்தால் இவ்வுண்மை