பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 08 நினைவுக் குமிழிகள்-; விளங்கும். புத்தருடைய திருமேனிகள் பல்வேறு பாங்கு களில் அமைக்கப் பெற்றுள்ளன. அவற்றிற் கிடையில் ஏதேனும் ஓர் இடத்தில் கணபதியின் திருமேனியைக் காணலாம். சமணர்கள் கணபதியை இன்னும் சிறப்பாகப் போற்றுவர். விஷ்ணு கோயில்களிலும் கணபதிக்கு இடம் உண்டு. கருவறைக்கு அண்மையில் உள்ள திருச்சுற்றில் தென்மேற்கு மூலையில் தும்பிக்கையான் (தும்பிக்கை யாழ்வார்) வீற்றிருப்பதைக் காணலாம். பிறகு சைவ சமயத்திலும் சக்தி சமயத்திலும் கணபதிக்குச் சிறப்புண்டு. சிவபெருமானுக்கு யானை முகத்தவன் மூத்த மகனாகின் றான். இளையவன் குமரக் கடவுளோ கெளமார மதத் துக்கு முதல்வன். அவனுடைய வழிபாட்டிலும் கணபதி பூசையே முன்னிற்கின்றது. இவனை வழுத்திய பின்பே மற்ற வழிபாடுகள் தொடங்குகின்றன. இமயம் முதல் குமரி வரை இந்த ஐதிகம் வேரூன்றி இருப்பதைக் காண Ést) f7 iÁ), எல்லாத் திருக்கோயில்களிலும் ஆனைமுகக் கடவு, ளுக்கு இடம் உண்டு. அதற்குமேல் தனியாக அவனுக் கென்றே அமைந்துள்ள கோயில்களோ எண்ணிக்கையில் அடங்கா. ஊர்தோறும் ஏனைய கோயில்கள் அமையாத விடத்தும் கணபதி கோயில் இருப்பதைக் காணலாம். புது வீடு புகும்போது ஒரு நொடிப் பொழுதில் அது கணபதி கோயில் ஆகின்றது. பிறகுதான் மச்களின் குடியிருப்பு வீடு ஆகின்றது. அவனுடைய வழிபாட்டிற்கு விதி யொன்றும் இல்லை. அவரவருக்கு உகந்த முறையில் இவனை வேண்டியவாறு வழுத்தலாம். இளையாற்றங்குடியில் நடைபெற்ற ஒரு முகாமில் அப் போது சென்னை மாநிலத்தில் பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்த திரு. B. கோபாலரெட்டியும் அவரது துணைவியும் முகாமைப் பார்வை இட்டனர். எதிர் பாராமல் நடைபெற்ற வருகை இது. திரு வேங்கடாச்சாரி